பொட்டாசியம் சத்து நிறைந்த 8 உணவு வகைகள்!

Vegetables
VegetablesImge credit: Slurrp
Published on

தாதுக்கள் மற்றும் எல்க்ட்ரோலைட் கலந்த இந்த பொட்டாசியம் ஊட்டச்சத்து, நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகுக்கிறது. இது ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் ஊட்டச்சத்தை கடத்தி  செல்கிறது. மேலும் இது நரம்பு மண்டலங்களும் தசைகளும் சரியாக வேலை செய்ய உதவுகிறது.

தினமும் பொட்டாசியம் சத்துள்ள வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தாலும்கூட அதனைப் பொட்டாசிய உணவுகளில் முக்கியமான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆகையால் பொட்டாசியம் சத்தை அதிகரிக்க உதவும் 8 உணவு வகைகளைப் பற்றி பார்ப்போம்.

1. அவகேடோ:

இப்போது அவகேடோ ஒரு அத்தியாவசிய உணவாக மாறி வருகிறது. இதில் கொழுப்பு சத்து, வைட்டமின் கே, ஃபொலேட் மற்றும் 345 மில்லி கிராம் அளவிற்கு பொட்டாசியம் உள்ளது. பொதுவாக உடலில் சோடியம் அளவு குறைவாக உள்ளவர்களுக்குத்தான் அதிகமான அழுத்தமும் கோபமும் உண்டாகும். அவர்கள் இந்த அவகேடோவை எடுத்துக்கொண்டால் பொட்டாசியம் சத்து அதிகமாகி அழுத்தத்தைக் குறைக்கும். தினமும் ஒரு அவகேடோவை முழுவதுமாக எடுத்துக்கொண்டால் ஒரு நாளிலேயே 15 சதவீத பொட்டாஸிய அளவு உடலில் அதிகரிக்கும்.

2. சர்க்கரைவள்ளி கிழங்கு:

உருளைக் கிழங்கிற்குப் பதிலாக சர்க்கரைவள்ளி கிழங்கு எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் அளவு சர்க்கரைவள்ளி கிழங்கு அதாவது 328 கிராம் அளவு கிழங்கு 16 சதவீத ஊட்டச்சத்தை தினமும் உடலுக்கு தருகிறது. இது கொழுப்பு சத்து குறைந்தது என்றாலும் புரத சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் நார் சத்து மிகுந்தவை. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு நல்லது.

3. கீரை:

கீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன என்பது நம் அனைவருக்குமே தெரியும். அந்தவகையில் 190 கிராம் குளிர்ந்த கீரைகள் 12சதவீத பொட்டாசியத்தை தருகிறது. அதேபோல் 90 கிராம் அளவு வேகவைக்காத பச்சை கீரை 12 சதவீத பொட்டாசியம் சத்தைத் தருகிறது. இதுமட்டுமல்லாமல் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் மெக்னிஸியம் ஆகியவை நிறைந்துள்ளது.

4. தர்பூசணி:

தர்பூசணி தண்ணீர் சத்து அதிகம் உள்ள ஒரு பழம் மட்டும் இல்லை, பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ள பழமும் கூட. பழத்தை வெட்டி இரண்டு துண்டுகள் மட்டும் தினமும் சாப்பிட்டாலே 14 சதவீத பொட்டாசியம் தினமும் கிடைக்கும். மேலும் கார்போஹைட்ரேட், புரத சத்து, அதிக கொழுப்பு சத்து, நார் சத்து, மெக்னிஸியம் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவையும் தர்பூசணியில் அதிகம் உள்ளன.

5. தேங்காய் தண்ணீர்:

இயற்கை நீரான இதில் எலெக்ட்ரோலைட், பொட்டாஸியம், மெக்னிஸியம், சோடியம், மாங்கனீஸ் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. ஒரு கப் அளவு தேங்காய் தண்ணீர் 13 சதவீத பொட்டாசியம் அளவைக் கொண்டுள்ளது.

6. பீன்ஸ்:

பீன்ஸில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டும் தாவர வகை புரத சத்தும் உள்ளன. ஒரு கப் அளவு வெள்ளை நிற பீன்ஸ் 21 சதவீத அளவு பொட்டாசியம் சத்தை தருகிறது. இது வாழைப்பழத்தை விட இரு மடங்கு அதிகமான பொட்டாசிய சத்தைக் கொண்டுள்ளது. கருப்பு பீன்ஸும் 13 சதவீத பொட்டாசியம் அளவைத் தருகிறது.

7. பருப்பு வகைகள்:

பருப்பு, பட்டாணி, வேர்கடலை ஆகியவற்றில் அதிகப்படியான பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. ஒரு கப் அளவு பருப்பு 15 சதவீத பொட்டாசியம் சத்தை கொண்டுள்ளது. அதேபோல் பட்டாணி, சோயா பீன்ஸ் ஆகியவை 10 சதவீதம் மற்றும் 19 சதவீத பொட்டாஸியம் அளவு சத்து நிறைந்தவை.

இதையும் படியுங்கள்:
புரதங்களை சாப்பிடுவதன் ஆரோக்கிய நன்மைகள்!
Vegetables

8. தக்காளி பேஸ்ட்:

வேகவைத்த தக்காளியில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மூன்று டேபிள் ஸ்பூன் அளவு தக்காளி பேஸ்ட் 10 சதவீத அளவு பொட்டாசிய அளவைக் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைக்கோபின் ஆகியவை நோயெதிர்ப்பு சக்திக்கு துணைப் புரிகிறது.

தினமும் ஒரு நபருக்கு 3400mg அளவு பொட்டாசியம் சத்து தேவைப்படுகிறது. மேற்கிந்திய உணவுகளில் அதிகப்படியான சோடியமும் குறைவான அளவு பொட்டாசியமுமே இருக்கும். ஆகையால் இந்த வகையான உணவுகளில் எதோ ஒன்றை தினமும் எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் உள்ள பொட்டாசிய அளவை அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com