மாதவிடாய் வருவதற்கு முன் சந்திரமுகியாக மாறும் பெண்கள்... ஏன் தெரியுமா?

மாதவிடாய் முன் PMS ஏற்படும் போது பெண்கள் அனுபவிக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
premenstrual syndrome symptoms
premenstrual syndrome PMS
Published on

மாதவிடாய் வருவதற்கு முன் பெண்கள் அனுபவிக்கும் PMS (premenstrual syndrome) அறிகுறிகள் என்ன? சோர்வு, கோபம், பருக்கள், தூக்கக் குறைவு போன்ற அறிகுறிகள் ஏன் வருகின்றன?

பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு முன் உடல், மனதில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதை அனைவரும் கவனித்து இருப்போம்.

சில பெண்களுக்குக் கோபம் அதிகரித்தல், சிலருக்குச் சோர்வு, சிலருக்கு தூக்கக் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த நிலையையே மருத்துவர்கள் Pre Menstrual Syndrome (PMS) எனக் குறிப்பிடுகிறார்கள்.

உலகளவில் 3 பெண்களில் ஒருவருக்கு இந்த PMS அறிகுறிகள் தென்படுகின்றன. இது பெண்களின் கற்பனை அல்ல, உண்மையான மருத்துவ நிலை.

மாதவிடாய் முன் PMS ஏற்படும் போது பெண்கள் அனுபவிக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள்:

* சோர்வு மற்றும் பலவீனம்

* வயிறு வீக்கம்

* முகப்பருக்கள் அதிகரிப்பு

* மார்பு வலி மற்றும் கனத்த உணர்வு

* மூட்டு மற்றும் தசை வலி

* நீர் தங்குவதால் எடை கூடுதல்

மனநிலை மாற்றங்களும் பெண்களைப் பாதிக்கும்:

* மனநிலை மாறுதல் (Mood swings)

* சீற்றம், கவலை, பதட்டம்

* உணவு ஆசைகள் அதிகரித்தல்

* தூக்கக் குறைவு

* கவனம் செலுத்த முடியாமை.

* நினைவாற்றல் குறைதல்.

மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே PMS-ன் முக்கியக் காரணம். ஈஸ்ட்ரஜன், புரோஜெஸ்ட்ரோன் அளவுகள் மாறுவதால் மூளையில் செரடோனின் குறைந்து மனநிலையைப் பாதிக்கிறது. சில பெண்களுக்கு அறிகுறிகள் மிகக் கடுமையாக இருக்கும். சிலருக்கு மிதமாக இருக்கும். இது மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வேறுபடுகிறது.

மருத்துவர் கருத்துபடி, "PMS என்பது பெண்களின் கற்பனை அல்ல. இது உண்மையான மருத்துவப் பிரச்சனை. மாதவிடாய் வருவதற்கு முன் பெண்கள் அனுபவிக்கும் சிரமங்களைக் குடும்பத்தினர் புரிந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். அதைச் சிறிய சண்டை, சிறிய கோபம் என அலட்சியப்படுத்தக்கூடாது."

உலகளவில் 3 பெண்களில் ஒருவருக்கு PMS ஏற்படுகிறது.

இது உடல், மனம் இரண்டையும் பாதிக்கும்.

ஹார்மோன் மாற்றமே இதற்கு முக்கியக் காரணம்.

குடும்ப ஆதரவு மிக அவசியம்.

இதையும் படியுங்கள்:
மாதவிடாய் கால கடும் வயிற்று வலியை சமாளிக்க...
premenstrual syndrome symptoms

இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் மருத்துவர் கருத்து அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.

PMS அறிகுறிகள் கடுமையாக இருந்தால், தங்களது தனிப்பட்ட மருத்துவரை அணுகுவது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com