புராஸ்டேட் சுரப்பி நலன் காக்க ஆய்வுகள் தரும் ஆரோக்கிய குறிப்புகள்!

Prostate Gland Health Study Tips
Prostate Gland Health Study Tipshttps://tamil.boldsky.com

ண்களுக்கு அடையாளம் தருவதும், அறுபது வயதுக்கு மேல் அவர்களை அச்சுறுத்துவதும் ஒரே உறுப்புதான். அது ஆண்களின் அடிவயிற்றில் சிறுநீரகத்துக்குக் கீழே சிறுநீரக்குழாய் தொடங்கும் இடத்தில் உள்ள மென்மையான உறுப்பு. அதுதான் புராஸ்டேட் சுரப்பி. இந்த சுரப்பியில் சுரக்கும் நீர் விந்தணுக்கள் எளிதில் நீந்தி செல்வதற்கு உதவி செய்கிறது. அறுபது வயதிற்கு மேல் ஆண் தன்மையை பறைசாற்றும், ‘டெஸ்டோஸ்டிரான்' ஹார்மோன் சுரப்பது குறைவதால் புராஸ்டேட் வீக்கம் உண்டாகும், அது சிலருக்கு புற்றுநோயாக மாறும் அபாயமும் உண்டு.

புராஸ்டேட் வீக்கம் ஏற்பட்டால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் உண்டாகும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு உண்டாகும். சில வேளைகளில் சிறுநீர் கழிக்கும்போது இரத்தம் வெளியேறும். சிறுநீர் கசிந்து சொட்டு சொட்டாகப் போகும்.

ஆண்களை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க இந்த புராஸ்டேட் சுரப்பியில் எந்த குறைபாடும் ஏற்படக்கூடாது. அதற்கு ஆண்களுக்குத் தேவையான சத்து மக்னிசியம். இது முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற நட்ஸ்களிலும், பூசணி, எள் மற்றும் ஆளி விதைகளிலும், அத்திப்பழம், சுரைக்காய் மற்றும் பசலைக்கீரையிலும் உள்ளன. அடுத்து துத்தநாகம் இது ஒமேகா 3 உள்ள மீன் மற்றும் கடல் சார்ந்த உணவுகள் மற்றும் காலிபிளவர், சோயாபீன்ஸ், முட்டை போன்றவற்றில் உள்ளன. மேலும், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்கிறார்கள் ஜப்பான் மருத்துவ ஆய்வாளர்கள்.

அதிகளவில் காய்கறிகள் உண்ணும் ஆண்களுக்கு புராஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது என்கிறார்கள் அமெரிக்காவின் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக வெங்காயம், வெள்ளைப்பூண்டு அதிகம் சாப்பிடும் ஆண்களுக்கு இது பொருந்தும். காரணம் அவற்றிலுள்ள அல்லியம் எனும் கந்தக உப்புதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

‘செலினியம்' சத்துள்ள உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொண்டால் அவர்களுடைய உடலில் புராஸ்டேட் கேன்சர் வருவதற்கான அறிகுறி 40 சதவீதம் குறைகிறது என்கின்றனர் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அனைத்து கடல் சார்ந்த உணவுகளிலும், கொட்டை உணவுகளிலும் செலினியம் அதிகம் உள்ளது.

பழ வகைகள் கலந்த பழச்சாற்றை தினமும் அருந்தி வந்தால் புராஸ்டேட் கேன்சரை தடுக்கலாம் என்கிறார்கள் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து திராட்சை, மாதுளை, செர்ரி ரக பழச்சாற்றை அருந்தி வர புற்றுநோய் கட்டி 25 சதவீதம் சுருங்கியது ஆய்வில் தெரிய வந்தது.

வாரத்திற்கு 3 நாட்கள் காளான் சாப்பிடும் ஆண்களுக்கு புராஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு தடுக்கப்படுவதாக ஜப்பானின் டோ ஹோகா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சமைத்த தக்காளி புராஸ்டேட் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுத்து பின் அவற்றை அழிக்கிறது என்கிறார்கள் லண்டன் போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இதற்குக் காரணம் லைகோபின் எனும் சத்து. இது சிவப்பு நிறமுடைய அனைத்து காய் கனிகளில் நிறைந்துள்ளது. வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு கிலோ தக்காளி சாப்பிட கேன்சர் ஆபத்து 20 சதவீதம் குறையும் என்கிறார்கள்.

அதிக உடல் உழைப்பற்ற, அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கும், அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் ஆண்களிடமே புராஸ்டேட் கேன்சர் அதிகரிக்கிறது என்கிறார்கள் இஸ்ரேல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். உங்கள் இடுப்பு சுற்றளவு 37 இன்ச் தாண்டி உள்ளதா? உங்களுக்கு புராஸ்டேட் கேன்சர் வர 13 சதவீதம் அதிகம் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். இதனைத் தவிர்க்க தவறாமல் உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்து வாருங்கள் என்கிறார்கள். இரவு உணவை 9 மணிக்குள் முடித்துவிட்டு தூங்க செல்கிறவர்களுக்கு புராஸ்டேட் கேன்சர் ஆபத்து குறைகிறது என்கிறார்கள் இண்டர் நேஷனல் கேன்சர் ஜர்னல் ஆராய்ச்சியாளர்கள்.

புகைப்பிடித்தல், மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காபி மற்றும் டீ அளவாக பருக வேண்டும். ஆண்களில் சிலர் அடிக்கடி டீ சாப்பிடுவார்கள். அது தவறு தினசரி 7 டீ சாப்பிடும் ஆண்களுக்கு புராஸ்டேட் கேன்சர் தாக்கும் அபாயம் உள்ளதாக லண்டன் கிளாஸ்கோ ரிசர்ச் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இது மற்ற பானங்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மன அமைதி தரும் பதற்றமில்லா வாழ்வு வேண்டுமா?
Prostate Gland Health Study Tips

ஆண்களில் சிலருக்கு வயதாக வயதாக அவர்களின் செக்ஸ் ஆர்வம் குறையும். ஆனால், செக்ஸ் ஆர்வத்தில் இயல்பாக இருப்பது நல்லது. செக்ஸ் ஆர்வத்தை கட்டுப்படுத்துவது புராஸ்டேட் வீக்கத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் ஹார்வார்டு மெடிக்கல் ஸ்கூல் ஆராய்ச்சியாளர்கள்.

புராஸ்டேட் சுரப்பி வீக்கமடையாமல் தப்பிக்க சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு தினமும் 2 முதல் 3 லிட்டர் நீர் அவசியம் பருக வேண்டும், சிறுநீரை அடக்காமல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அவசியம் கழிக்க வேண்டும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com