ப்ராஸ்டேட் வீக்கம் (Prostate inflammation): ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அத்தியாவசிய தகவல்கள்!
ப்ராஸ்டேட் வீக்கம்(Prostate inflammation) என்பது ஆண்குறியின் அடிப்பகுதியில் உள்ள ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் அல்லது அழற்சியை குறிக்கும் தொற்று ஆகும். தீங்கற்ற ப்ராஸ்டேட் ஹைபர் பிளாஸியா எனப்படும். ப்ராஸ்டேட்டின் அறிகுறிகள் என்றால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிவயிறு முதுகில் பின்புறம் வலி, சிறுநீரை அடக்க முடியாமல் இருத்தல் போன்றவை அறிகுறி ஆகும்.
BPH என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் ப்ராஸ்டேட் வகையை குறிக்கும். இது சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுத்தும். பாக்டீரியா தொற்று மற்றும் அழற்சி மூலம் ஏற்படுகிறது. அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது, பின் முதுகில் வலி, குளிர் காய்ச்சல் போன்றவை ஏற்படலாம். சிறுநீர் முழுமையாக வெளியேறாத நிலை ஏற்படும். ப்ராஸ்டேட் என்பது சிறுநீர்ப்பைக்கு கீழ் மலக்குடலுக்கு முன்பாக அமைந்துள்ள சிறிய வால்நட் போன்ற சுரப்பி ஆகும்.
இது விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது. இனப்பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தீங்கற்ற வளர்ச்சி புற்றுநோய் அல்லாத விரிவாக்கம் எனப்படும். இதனால் பாலியல் ஆசை குறையும். சிலருக்கு எடை குறைப்பு ஏற்படும். அதிக கொழுப்புள்ள உணவு, உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன் ஆகியவை முக்கிய காரணமாக கருதப்படுகிறது. சிகப்பு இறைச்சி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படும். அதிகமாக மது அருந்தினால் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்பட்டு பிராஸ்டேட் ஏற்பட வழி வகுக்கும்.
இதனை டாக்டர் மலக்குடல் வழியே தன் விரலை விட்டு சோதிப்பார். மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் மூலமாகவும் இதனை அறியலாம். ப்ராஸ்டேட் புற்றுநோய் இருப்பதை பயாப்ஸி டெஸ்ட் மூலம் அறியலாம். உணவில் பழங்கள், காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். ரத்தத்தில் PSA டெஸ்ட் மூலம் இதனை கண்டறியலாம். அதிக அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. தொற்று நோய் வராமல் தடுக்க உதவும்.
சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரில் ரத்தம் வருதல், அதிகமான எடை இழப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். ஆண்களுக்கு 50 வயது முதல் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. முற்றிய நிலையில் தான் ப்ரஸ்டேட் புற்றுநோய் ஏற்படும். சாதாரணமாக பகலில் ஏழு முறை இரவில் இரண்டு முறை சிறுநீர் கழிக்கலாம். அதற்கு மேல் இருந்தால் இந்த பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. 50 வயதை கடந்தவர்களுக்கு 50 சதவீதம், 70 வயதை கடந்தவர்களுக்கு 90 சதவீதம் இதன் பாதிப்பு இருக்கும் என மருத்துவ அறிக்கை கூறுகிறது.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் முழுமையாக வெளியேறாதது, சொட்டு சொட்டாக வெளியேறுவது, மந்தமாக சிறுநீர் கழித்தல் போன்றவை இதன் அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம். தற்போது இதற்கு லேசர் சிகிச்சை மூலம் எளிதாக சிகிச்சை அளிக்கப்படுகிறது மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் காலம் தாழ்த்தாது சம்பந்தப்பட்ட டாக்டரை அணுகுவது நம் உடல் நலத்திற்கு நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)