காது அடைப்பு மற்றும் காது வலியிலிருந்து பாதுகாப்பு!

காது அடைப்பு மற்றும் காது வலியிலிருந்து பாதுகாப்பு!

ப்போதும் வெளிக்காது, உள்காது என இரண்டு பக்கமும் சரியான அழுத்தம் இல்லாமல் போனால், காது அடைப்பும் வலியும் ஏற்படும். விரல்களால் மூக்கை அழுத்திப் பிடித்து, முடிந்த அளவு வாயை மூடி காற்றை முழுவதுமாக உள்ளிழுத்து, காது வழியாக வெளியேற்ற முயற்சிக்கலாம். இதனால் காதுக்குள் இருக்கும் ஜவ்வானது சமநிலையை அடைந்து அடைப்பு, வலி குறையும். பிராணாயாமம் நல்ல பயிற்சி.

மழை, பனிக்காலத்தில் மூக்கடைப்பு ஏற்படுவது சகஜம். குழந்தைகளுக்கு மூக்கடைப்பு நீடிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில், தொண்டைக்கும், காதுக்கும் இடையில் உள்ள காது, தொண்டை இணைப்பு குழாய் அடைப்பு ஏற்பட்டு காது வலியை ஏற்படுத்தும். இரவு நேரத்தில்தான் காது வலி அதிக தொல்லையைக் கொடுக்கும்.

85 டெசிபலுக்கு மேல் போகும்போதுதான் காது கேளாமை, இரைச்சல் ஏற்படுகிறது. காதில் ஏற்படும் இரைச்சலை, ‘டினிக்டஸ் பிரச்னை’ எனச் சொல்வர். அடைப்பினாலும், இரைச்சலாலும் உள்காதில் நிணநீர் அதிகமாக இருந்தாலும் இந்தப் பிரச்னை வரும்.

காது இரைச்சலை சவுண்ட் தெரபி மூலம் குறைக்க முடியும். தொடர்ந்து பத்து நாட்கள் சிகிச்சை எடுக்க, இரைச்சலை குறைத்து விட முடியும். காதில் ஹேர் பின், பட்ஸ் போட்டு குடைவது தவறு. காதில் அப்படி செய்தால் புண் ஏற்பட்டு சீழ் பிடித்து விடும். தவிர காதில் அடிபடுதல் மற்றும் சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் காதில் சீழ் வடிதல் பிரச்னைகள் உண்டாகும். சளி, பாக்டீரியா தொற்று, சுகாதாரமற்ற சூழ்நிலைகள் கூட காதில் சீழ் வடிதல் பிரச்னைகளை ஏற்படுத்தும். காய்ச்சல், காதில் வலி, காதில் வாடை என அறிகுறிகள் இருந்தால் வீட்டு வைத்தியம் பார்க்காமல், ஆரம்ப நிலையிலேயே டாக்டரைப் பார்க்க வேண்டும்.

காது மற்றும் நரம்புகளில் பிரச்னைகள் இருந்தால் மயக்கம், தடுமாற்றம் இருக்கும். இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள சரியாகிவிடும்.

காது கேட்கும் திறன் சிறக்க என்ன செய்யலாம்?

* பட்ஸ், குச்சி வைத்து காதை சுத்தம் செய்தல் கூடாது.

* அதிக சப்தம் உள்ள இடங்களில் நிற்காமல் இருக்க, மெல்லிய இசை கேட்டல், ஹெட் போனை அணிந்தாலும் மிகக் குறைந்த அளவில் கேட்க, காது பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

* காதில் பஞ்சை வைத்துக்கொண்டு டிராவல் பண்ணுவது, தொடர்ந்து ஒரே காதில் வைத்து செல்போன் பேசுவதைத் தவிர்ப்பது என கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோய்க்கும் கழுத்து கறுப்புக்கும் என்ன தொடர்பு?
காது அடைப்பு மற்றும் காது வலியிலிருந்து பாதுகாப்பு!

* காதில் பூச்சி புகுந்து விட்டால் சில சொட்டுகள் எண்ணெய் ஊற்ற பூச்சி வெளியே வந்து விடும்.

* காதில் அடிக்கடி டிராப்ஸ் போடக் கூடாது. இதனால் நோய்த் தொற்று, அரிப்பு ஏற்படலாம். உடனடியாக டாக்டரைப் பார்க்க முடியாதபோது திருகு வலி குறைய இரண்டு சொட்டு ரோஜா தைலத்தை விடலாம். இதனால் வலி குத்தல் மறையும். மல்லிகை எண்ணையும் விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com