அதிக புரதம் நிறைந்த 5 வெஜிடேரியன் உணவுகள்!

Protein rich foods for vegetarians
Protein rich foods for vegetarians

மனித உடலின் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஒன்றாக புரதச்சத்து கருதப்படுகிறது. உடலுக்கு வலிமை சேர்க்கும் பல செயல்பாடுகளுக்கு தினசரி நமக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். ஆனால் பெரும்பாலான இந்தியர்களின் உணவு முறையில் புரதம் நிறைந்த உணவுகள் இருப்பதில்லை. அதேபோல புரதச்சத்து என்றாலே அசைவத்தில்தான் அது இருக்கும் என தவறாகக் கருதுகின்றனர். எனவே இந்த பதிவில் அதிக புரதச்சத்து நிறைந்த வெஜிடேரியன் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

  1. கிட்னி பீன்ஸ்: ராஜ்மா எனப்படும் கிட்னி பீன்ஸில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் அடங்கியுள்ளது. ஒருவரின் புரதச்சத்து தேவையை தீர்க்கும் இந்த உணவு, இந்தியா முழுவதும் பெரும்பாலான நபர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. இதை அப்படியே வேக வைத்தோ அல்லது குழம்பு போல செய்தோ சாப்பிடலாம்.

  2. பால் & பன்னீர்: நீங்கள் தினசரி பால் குடித்து வந்தால் அது உங்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்தை அளிக்கும். இதைத் தவிர பாலில் கால்சியம் நிறைந்துள்ளதால், நம் எலும்புகளை வலுவாக்கி பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் பாலில் அதிகம் கொழுப்பு இருப்பவற்றை தேர்வு செய்ய வேண்டாம். நன்கு செறிவூட்டப்பட்ட பாலில் புரதம் அதிகம் இருக்கும். அதேபோல, பாலில் இருந்து செய்யப்படும் பன்னீரில் அதிகப்படியான புரதம் உள்ளது.

  3. விதைகள்: விதைகள் உங்கள் உடலுக்குத் தேவையான சிறு புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது. பூசணி விதை, பாப்பி விதை, சூரியகாந்தி விதை, எள் போன்றவை புரதங்களின் இறந்த மூலமாகும். இவற்றில் ஆரோக்கியக் கொழுப்புகளும் அதிக அளவில் உள்ளது. ஆனால் ஒரே நேரத்தில் அதிகப்படியான விதைகளை சாப்பிடக்கூடாது. இவற்றை சாலட்கள், மில்க் ஷேக், சாண்ட்விச் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். 

  4. பருப்பு வகைகள்: பொதுவாகவே எல்லா வகையான பருப்பு வகைகளிலும் புரதம் காணப்படுகிறது. இந்தியர்களாகிய நாம் பருப்பு வகைகளை சாப்பிட்டாலும், நம் உடலுக்கான புரதத் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு எடுத்துக் கொள்வதில்லை. அதேநேரம் இதை அதிகமாக சாப்பிடுவதால் பிற பாதிப்புகளும் ஏற்படும் என்பதால், இவற்றை நாம் அதிகமாக எடுத்துக் கொள்வதில்லை. இதில் நம் உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் அனைத்தும் இருக்கும் ஒரு மலிவான உணவாகும். 

  5. கொண்டைக்கடலை: கொண்டைக்கடலையில் கணிசமான அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. அதாவது 100 கிராம் வேகவைத்த கொண்டைக்கடலையில் சுமார் 9 கிராம் வரை புரதச்சத்து உள்ளது. இதன் எடையில் சுமார் 67 சதவீதம் கார்போஹைட்ரேட்டுகளும், மீதமுள்ளதில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com