பாத வெடிப்பு பிரச்னைக்கு பேருதவி புரியும் ப்யூமிக் கல்!

Pumice stone
Pumice stone

சிறுவர்களாக இருக்கும் போது பட்டு போல் இருந்த  நம் பாதங்கள் நாளாக நாளாக சொரசொரப்பாகி, பொலிவின்றி போய் விடுகிறது. பாத பாராமரிப்பில் நம் அலட்சியமே பாதத்தில் ஏற்படும் பாத வெடிப்பு, வலி, வீக்கம் போன்றவற்றிற்கு காரணம்‌.

கால்களுக்குப் பொருந்தாத காலணிகள், உப்பு தண்ணீரில் நெடுநேரம் நிற்பது, தண்ணீரில் வேலை செய்வது போன்ற காரணங்களாலும் பாத வெடிப்பு உண்டாகிறது. இத்தகைய பிரச்னைகளை நீக்க உதவுகிறது ப்யூமிஸ் கல்.

இந்தக் கல் பாதத்தின் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதை நேரடியாக சருமத்தின் மீது உபயோகிக்கக் கூடாது. உலர்ந்த கல்லை பாதங்களில் தேய்ப்பதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். இதன் மூலம் சருமத்தில் சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பியூமிஸ் கல்லை பாதங்களின் மீது மென்மையாக வட்ட வடிவில் சுழற்றி தேய்க்கவும். இதனால் சருமத்தில்  படர்ந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். ஒவ்வொரு முறை கல்லைப் பயன்படுத்திய பிறகும் அதில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும்.

ஒருவர் பயன்படுத்திய கல்லை அடுத்தவர் பயன்படுத்தக் கூடாது. ஒரே கல்லை மூன்று மாதங்களுக்கு பிறகு மாற்றி விட வேண்டும். பியூமிக் ஸ்டோனை பயன்படுத்திய பிறகு பாதங்களில் மசாஜ் செய்யலாம். மாய்ச்சுரைசர் போடலாம். இல்லையெனில் ஈரம் உலர்ந்ததும் தேங்காய் எண்ணெய் தடவி பின் சாக்ஸ் போட்டுக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
கோயிலுக்கு அழகு சேர்க்கும் மண்டபங்கள் தெரியுமா?
Pumice stone

இதனால் பாதங்கள் மிருதுவாகவும் பளபளப்பாகவும் பொலிவுடன் காணப்படும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் கால்கள் கருமையின்றி, குதிகால் வெடிப்பு இன்றி ஆரோக்கியமாக இருக்கும். பாதங்களில் காயம், புண், எரிச்சல் இருந்தால் பியூமிக் கல்லை உபயோகிக்கக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com