கிழக்கு அங்கலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (UEA) ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
புகைப்பிடிப்பவர்களுக்கு வெகுமதிகளை வழங்குவது என்று.
இந்த முயற்சி, அவர்கள் அந்த பழக்கதை விட்டுவிட அல்லது அதிலிருந்து வெளியேற உதவும் ஒரு சிறந்த வழியாகும் என்று அவர்கள் ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர்.
'காக்ரேன் ரிவியூ' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், பண வெகுமதிகள், வவுச்சர்கள் அல்லது பிற பரிசுகள் போன்ற ஊக்கத்தொகைகளை வழங்குவது புகைப்பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
21,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 33 ஆய்வுகளின் தரவை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்து கண்டறிந்தனர்.
ஆறு மாத ஆய்வில் நூறு பேரில் பத்து பேர் இந்த வெகுமதிகள் பெற்றுக்கொண்டு இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளனர்.
பணம் அல்லது வவுச்சர்கள் போன்ற உடனடி மனநிறைவை வழங்கும் வெகுமதிகள் மிகவும் பயனுள்ள வெகுமதிகளாகும். இவை, குறிப்பிட்ட காலத்திற்கு புகைபிடிக்காமல் இருப்பது போன்ற மைல்கற்களை அடைவதில் உதவும்.
ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் கெய்ட்லின் நோட்லி இவ்வாறு கூறுகிறார்:
"புகைபிடிப்பவர்களுக்கு வெகுமதிகளை வழங்குவது ஒரு சிறந்த வழியாகும். முக்கியமானது, குறிப்பிட்ட மைல்கற்களை அடைவதற்கு உடனடி, உறுதியான மற்றும் நிபந்தனையுடன் கூடிய வெகுமதிகள் உதவும்."
கார்ப்பரேட் கம்பனி மற்றும் அலுவலக உயரதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு target முடிக்க incentive கொடுக்கும் நீங்கள் இந்த பழக்கத்தில் இருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்கலாமே. அவர்களுக்கு சிகரெட் பிடிப்பதால் வரும் கேன்சர் போன்ற நோய்களை தவிர்க்கலாமே.