நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பிட்னஸ் ரகசியம்.. வயிறு பிரச்சனைகளைத் தீர்க்கும் 3 சூப்பர் உணவுகள் இதோ!

rakul-preet-singh-fitness-secret
rakul-preet-singh-fitness-secret
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on: 

உடல் எடையை குறைக்க வேண்டும் என்றாலும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றாலும் நமது வயிறு மற்றும் குடல் பகுதி சுத்தமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். இதற்காக பலரும் இணையத்தில் தேடி கண்ட கண்ட டயட் முறைகளை பின்பற்றி வருவார்கள். 

ஆனால் பிரபல பாலிவுட் நடிகையான ரகுல் ப்ரீத் சிங், செரிமானத்திற்கு உகந்த மூன்று மிக எளிமையான உணவுகளை தனது பிட்னஸ் ரகசியமாக சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அந்த மூன்று மேஜிக் உணவுகள் என்னென்ன மற்றும் அது உண்மையிலேயே வேலை செய்யுமா என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

அந்த மூன்று எளிய உணவுகள்!

குடலுக்கு எந்த ஒரு பெரிய பாரமும் கொடுக்காமல் மிக எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளாக வெள்ளை சாதம், வாழைப்பழம் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகிய மூன்றையும் ரகுல் பரிந்துரைக்கிறார். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் உடல் எடையை கட்டுக்குள் வைக்க பிரவுன் ரைஸ் எல்லாம் சாப்பிடுவது கிடையாது. மதிய உணவில் எப்போதும் வெள்ளை சாதமும் இரவில் ரொட்டியும் தான் அவரது வழக்கமான உணவாம். 

சாப்பிடும் தின்பண்டங்களை எடை போட்டு அளந்து சாப்பிடும் பழக்கம் அவருக்கு கிடையாது என்றாலும், எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற தெளிவான அளவு அவருக்கு தெரியும். அளவோடு சாப்பிட்டால் நாம் அனைத்து வகையான உணவுகளையும் தாராளமாக ருசிக்கலாம் என்பது அவரது அட்வைஸ்.

மருத்துவர்கள் கூறும் உண்மை!

ரகுல் சொல்லும் இந்த விஷயங்கள் நூறு சதவீதம் உண்மைதான் என பிரபல மருத்துவர்களும் ஆமோதிக்கிறார்கள். பொதுவாகவே வெள்ளை சாதம் குடலுக்கு எந்த ஒரு கஷ்டமும் கொடுக்காமல் மிக வேகமாக செரிமானம் அடைந்து உடலுக்கு தேவையான எனர்ஜியை உடனடியாக கொடுத்துவிடும். அதேபோல வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் கொட்டிக்கிடக்கிறது. 

இது குடலின் உட்புறத்தை அமைதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வயிறு சரியில்லாத நேரங்களில் உடலுக்கு தேவையான சத்துக்களை உடனடியாக மீட்டெடுக்க உதவுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இருந்தாலும், அது குடல் எளிதாக ஏற்கும் வகையில் மென்மையாக செயல்படும். இந்த மூன்றுமே மருத்துவ உலகிலும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் மிக சிறந்த உணவுகள் தான்.

சாப்பிடும் முறை!

நமது வீட்டில் சமைக்கும் இந்த உணவுகளை தினசரி டயட்டில் எந்த ஒரு தயக்கமும் இன்றி தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம். மதிய நேரத்தில் சாதத்துடன் பருப்பு அல்லது காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவது ஒரு முழுமையான சத்துக்களை உடலுக்கு கொடுக்கும். காலை நேர ஸ்நாக்ஸாக வாழைப்பழமும், கண்ட கண்ட எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களுக்கு பதிலாக வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கும் ஒரு சூப்பரான சாய்ஸ். 

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற விலை குறைவான உணவாகும். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் சாதம் மற்றும் வாழைப்பழத்தை கொஞ்சம் அளவோடு எடுத்துக்கொள்வது முக்கியம். மேலும் இவற்றை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதையோ அல்லது அதிகப்படியான இனிப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து சாப்பிடுவதையோ முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
செரிமானத்தை மேம்படுத்தும் சுக்கான் கீரை கூட்டுவின் அற்புதங்கள்!
rakul-preet-singh-fitness-secret

செரிமானத்தை சுலபமாக்கி குடலை எப்போதுமே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் இந்த எளிய உணவுகளை உங்களின் அன்றாட வாழ்வில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதோடு உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

logo
Kalki Online
kalkionline.com