

1. வெற்றிலை கசாயம்
தேவையான பொருட்கள்
வெற்றிலை - இரண்டு
இஞ்சி - சிறிது
புதினா -ஒரு கைப்பிடி
கொத்தமல்லி காம்பு -சிறிது
கற்பூரவள்ளி இலை - இரண்டு
கொத்தமல்லி -ஒரு டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
மிளகு தூள் -அரை டீஸ்பூன்
செய்முறை
வெற்றிலையை கழுவி துண்டு துண்டாக்கி மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து 1 டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து வடிகட்டி சூடாக இருக்கும் போது தகுந்த உப்பு, மிளகு தூள் சேர்த்து குடிக்கலாம் . மழைக்காலத்துக்கேற்ற வெற்றிலைக் கஷாயம் தயார். சூடாக அருந்தினால் சளி, இருமல் இரண்டும் மட்டுப்படும்.
2. புதினா கசாயம்
தேவையான பொருட்கள்
புதினா - ஒரு கைப்பிடி
தண்ணீர் -ஒன்றரை டம்ளர்
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் -அரை டீஸ்பூன்
செய்முறை
அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி புதினாவை கிள்ளி போட்டு நன்கு கொதித்ததும் வடிகட்டி இறக்கி உப்பு, மிளகு தூள் கலந்தால் புதினா கசாயம் தயார். சுடச்சுட மிக மெதுவாக உறிஞ்சி குடிக்கலாம். இந்த புதினா கசாயம் குடிக்க மழைக்காலத்தில் வரும் இருமல், சளியும் நன்கு குறையும்.
3. கருந்துளசி பானம்
தேவையான பொருட்கள்
கருந்துளசி -கைப்பிடி அளவு
வெல்லத்துருவல் - 5 டீஸ்பூன்
இஞ்சி -சிறிது
எலுமிச்சம் பழம் - ஒன்று
ஏலக்காய் -2
தேன் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
துளசியுடன் இஞ்சி சேர்த்து நைசாக அரைக்கவும். வெல்லத் துருவல் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ஏலத்தூள் அரைத்த துளசி சேர்த்து சூடாக்கி நன்கு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் விட்டு எலுமிச்சை சாறு விட்டு தேன் சேர்த்து கலந்து குடிக்கவும். கருந்துளசி பானம் ரெடி. மழைக்காலத்தில் இதனை குடித்தால் சளி, இருமல் குறையும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)