

கழற்சிக்காய் என்பது கழற்சிக் கொடியில் காய்க்கும் அற்புதமான மூலிகை ஆகும். சாதாரணமாக வேலி ஓரங்களிலும் புதர்பகுதிகளில் இந்த கொடி படர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கழற்சிக்காய் பார்க்க முட்டை வடிவில் இருக்கும்.10க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் சக்தி கழற்சிக்காய்க்கு உள்ளது.
1. நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்களாலும், காயங்களையும் வலி அதிகமாக இருக்கும். அப்போது கழற்சிக்காயை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் இருக்கும் இடத்தில் பூசினால் சீக்கிரம் குணமாகும்.
2. கழற்சிப் பருப்புடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து கட்டிகளுக்குப் பற்று போட, அவை பழுத்து உடையும் அல்லது கரைந்துவிடும்.
3. உடலின் சில பகுதிகளில் சுளுக்கு ஏற்படும். அப்போது அப்பகுதியில் அதிகமாக வீக்கம் ஏற்படும். அப்போது கழற்சிக்காய் இலைகள் மற்றும் விதைகளை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து பூசினால் வீக்கங்கள் விரைவில் குறையும்.
4. கழற்சிக்காயைத் தீயிலிட்டுக் கொளுத்தி சூரணமாக ஆக்கி, அத்துடன் படிகாரம், கொட்டைப்பாக்கு, கரி ஆகியவற்றைச் சேர்த்து பல் துலக்கி வர ஈறு நோய்கள் போகும், ஈறுகள் பலப்படும், பல் சொத்தை குணமாகும்.
5. நீர்க்கட்டிகள் மற்றும் பி.சி.ஓ.டி (PCOS) போன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்த கழற்சிக்காய் பெரிதும் உதவுகிறது. கர்ப்பப்பையைப் பாதுகாக்க உதவுகிறது.
6. வயிற்று பிரச்சனைகள் பலருக்கு உள்ளது. வயிற்றில் வாயு கோளாறுகள், மலச்சிக்கல், குடற்புழு இருந்தால் கழற்சிக்காய் சிறந்த நிவாரணி மருந்தாக செயல்படுகிறது. கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து சிறிதளவு நீரில் சேர்த்து தினமும் பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும்.
7. கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும். அதன் செயல்பாடுகளும் மேம்பாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
8. கழற்சிப்பருப்பு ஒன்றோடு ஐந்து மிளகு சேர்த்து அந்திசந்தி என இருவேளை உள்ளுக்குக் கொடுப்பதால் வாதக் காய்ச்சல், விட்டு விட்டு வரும் முறை காய்ச்சல், கர்ப்பப்பை வலி, கண்ட மாலை, அண்ட வாதம் ஆகியன குணமாகும்.
9. ஒரு கழற்சிக்காய் பருப்புடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து மோருடன் குடிக்க வயிற்று வலி, வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும்.
10. விளக்கெண்ணெயில் கழற்சி சூரணத்தை போட்டு காய்ச்சி, வடிகட்டப்பட்ட தைலத்தை விரை வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி வந்தால் விரை வீக்கம் சரியாகும்.
11. தொழுநோய் என்பது ஒரு வகை கிருமி உடலில் தொற்றிக்கொண்டு கை கால் விரல்கள், மூக்கு, உதடு போன்ற உறுப்புகள் உடலின் இன்ன பிற பாகங்கள் போன்றவற்றை பாதிக்கும். உறுப்புகளை அழுகச் செய்யும் கொடுமையான வியாதியாகும். கழற்சிக்காய் விதைகள் சிலவற்றை கடாயில் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வறுத்து, பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.
12. கழற்சிக்காய் கொடிகளின் இலைகளை பக்குவம் செய்து உள் மருந்தாக சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியிருக்கும் யானைக்கால் வியாதியை பரப்பும் தொற்றுண்ணிகளை வேரோடு அழிக்கிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)