சூடாகவோ அல்லது காரமாகவோ சாப்பிட்டால் உங்களுக்கு வியர்க்கிறதா? அச்சச்சோ! ஜாக்கிரதை!

Sweating While Eating
Sweating While Eating Spicy Foods

நீங்கள் காரமான உணவை உண்ணும் போதெல்லாம் வியர்வை அதிகமாக வெளியேறுகிறதா? கவலை வேண்டாம் அது உங்களுக்கு மட்டும் இல்லை, சூடான மற்றும் காரமான உணவுகளை உண்ணும் போது பலருக்கு அதிக வியர்வை வெளியேறுகிறது. இது ஏதேனும் மோசமான உடல் பிரச்சினைகளின் அறிகுறியாகத் தோன்றினாலும் இதற்குப் பின்னால் சில காரணங்கள் உள்ளன. இந்த பதிவில் அதிக சூடான அல்லது காரமான உணவுகளை உட்கொள்ளும்போது வியர்ப்பதற்கான காரணங்கள் பற்றி பார்க்கலாம். 

Capsaicin விளைவு: மிளகாய் உள்ள காரத்தன்மைக்கு கேப்சைஸின் என்ற கலவையே காரணமாகும். நீங்கள் காரமான உணவுகளை உண்ணும்போது உங்கள் நாக்கில் உள்ள ரெசிப்டார்கள் கேப்சைஸினை ஈர்க்கிறது. இந்த ரெசிப்ட்டார்களே வியர்வை சுரப்பிகளிலும் காணப்படுவதால், வியர்வையை அதிகமாக உற்பத்தி செய்யத் தூண்டுகின்றன. இதன் விளைவாக உங்கள் உடல் குளிர்ந்து வெப்பநிலையை சீராக்க முயற்சிக்கிறது. 

அதிக வளர்ச்சிதை மாற்றம்: காரமான உணவுகள் உங்கள் வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை தற்காலிகமாக அதிகரிக்கலாம். சூடான உணவுகளை உட்கொள்ளும்போது அது அதிக உள் வெப்பத்தை உருவாக்கி உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையும் அதிகரிக்க வழிவகுக்கிறது. வியர்வை என்பது உடலை இயற்கையாக குளிர்ச்சியாக்கும் ஒரு வழிமுறையாகும். இது உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை சருமத்தின் வழியாக வெளியேற்றுகிறது. 

நரம்பு மண்டல ரெஸ்பான்ஸ்: நீங்கள் காரமான உணவுகளை உட்கொள்ளும் போது உங்கள் உடல் தாக்குதலுக்கு உள்ளானது போல் உணர்கிறது. அதிகப்படியான வெப்பம் உங்கள் நரம்பு மண்டலங்களைத் தூண்டி காரம் அல்லது அதிக வெப்பத்திற்கு எதிராக செயல்பட வைக்கிறது. இந்த சூழ்நிலையில் உங்கள் உடல் காரமான தன்மையை ஒரு அச்சுறுத்தலாக உணர்ந்து, அதை எதிர்த்து போராட வியர்வையின் குளிரூட்டும் அம்சத்தை செயல்படுத்துகிறது. 

தனிப்பட்ட சென்சிடிவிடி: ஒவ்வொரு நபரின் உடலும் காரமான உணவுகளுக்கு வித்தியாசமாக செயல்படுகிறது. சில நபர்கள் குறைந்த காரம் சாப்பிட்டாலே அதிக உணர்திறன் உடையவர்களாக இருக்கலாம். இதனால் அவர்களுக்கு அதிக வியர்வை ஏற்படுகிறது. மேலும் மரபியல், வயது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் போன்ற காரணிகள் வெப்பத்தைத் தூண்டும் உணவுகளுக்கு உங்கள் உடலின் எதிர்வினையை பாதிக்கலாம். 

உணர்ச்சி மற்றும் உளவியல்: காரமான உணவுகளை உண்ணும்போது வியர்ப்பது உளவியல் காரணிகளாலும் இருக்கலாம். அதாவது நீங்கள் காரமான உணவுகளை பதட்டம் அல்லது அசௌகரியத்துடன் தொடர்பு படுத்தினால், இது உங்கள் உடலில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதிக வியர்வையை வெளியேற்றும். 

இதையும் படியுங்கள்:
Pink Sauce Pasta: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சூப்பர் உணவு! 
Sweating While Eating

காரமான உணவுகளை உண்ணும் போது வியர்ப்பது ஒரு சாதாரண எதிர்வினை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும் மற்ற சூழல்களில் உங்களுக்கு அதிகமாக வியர்த்தால், உடனடியாக ஒரு சுகாதார நிபுணரை அணுகிய ஆலோசனை பெறுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com