சாப்பிட்ட உடனே வயிறு கலக்குதா? இத சாதாரணமா நினைக்காதீங்க!

pooping
Pooping
Published on

"வயிறு நன்றாக இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும்" என்பது நம் முன்னோர்களின் சொலவடை. ஆனால், இன்றைய அவசர உலகில் பலரும் இந்த உண்மையை மறந்துவிடுகிறோம். குறிப்பாக, உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால், பலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதில் ஒன்றுதான், சாப்பிட்ட உடனேயே கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வு.

சாப்பிட்ட உடனேயே கழிப்பறைக்குச் செல்வதற்கான காரணங்கள்:

இந்த பிரச்சனைக்கு மருத்துவ உலகில் 'காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ்' என்று பெயர். இது ஒரு இயற்கையான செயல்முறையாகும். உணவு நம் வயிற்றை அடையும்போது, பெருங்குடலில் சுருக்கம் ஏற்பட்டு, செரிமானம் நடைபெறும். ஆனால், சிலருக்கு இந்த செயல்முறை மிகவும் வேகமாக நடைபெறுவதால், உணவு முழுமையாக செரிக்கப்படுவதற்கு முன்பே மலம் கழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

உணவு உண்டவுடன், உடல் அதிலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளும் செயல்முறை தொடங்குகிறது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, உணவுப் பாதை முழுவதும் ஒரு இயக்கம் ஏற்படும். இது இயற்கையான செயல்முறையாகும். அதிக பதட்டம் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும்.

எரிச்சல் கொண்ட குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடல்கள் மிகவும் உணர்திறன் கொண்டவையாக இருக்கும். மன அழுத்தம் இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், போதுமான தூக்கம் இல்லாதது போன்றவை இந்த பிரச்சனைக்கு வழிவகுக்கும். அழற்சி குடல் நோய், சிலியாக் நோய், இரைப்பை அழற்சி, உணவு ஒவ்வாமை போன்ற உள்நோய்களும் இந்தப் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.

சாப்பிட்ட உடனேயே கழிப்பறைக்குச் செல்வது ஏன் ஆபத்தானது?

சிலர் சாப்பிட்ட உடனேயே கழிப்பறைக்குச் செல்வது உணவு செரிக்காமல் வெளியேறுவதற்கான அறிகுறி என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. பொதுவாக நீங்கள் சாப்பிட்ட உணவு செரித்து 18-24 மணி நேரத்திற்குப் பிறகுதான் வெளியேறும். சாப்பிட்ட உடனேயே கழிப்பறைக்குச் செல்வது உடலில் உள்ள நீர்ச்சத்து இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
வயிறு உப்புசத்தை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்வது எப்படி?
pooping

இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது?

  • நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற உணவுகள் நார்ச்சத்துக்கு நல்ல மூலமாகும்.

  • போதுமான அளவு தண்ணீர் குடிப்பது செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவும்.

  • யோகா, தியானம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

  • காபி, மது போன்றவற்றை குறைவாக உட்கொள்ளுங்கள். இந்த பிரச்சனை நீண்ட நாட்கள் நீடித்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

சாப்பிட்ட உடனேயே கழிப்பறைக்குச் செல்வது என்பது அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடிய பிரச்சனை அல்ல. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனையை எளிதாக சரிசெய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com