சிவப்பு அவல் Vs வெள்ளை அவல்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

Red Aval Vs White Aval
Red Aval Vs White AvalImage Credits: YouTube
Published on

பொதுவாக, அவலை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதில் சிவப்பு அவல் மற்றும் வெள்ளை அவல் என இரண்டு வகையுண்டு. சிவப்பு அவலில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை அவலை விரைவாக சமைத்துவிட முடியும். எனினும், இரண்டிலும் எண்ணற்ற ஆரோக்கிய பலன்கள் உள்ளன. அவற்றைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

சிவப்பு அவல் சிவப்பு அரிசியிலிருந்து எடுக்கப்படுகிறது. சிவப்பு அவலின் சிவப்பான நிறம் Anthocyanins என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட்டிலிருந்து வருகிறது. இது வீக்கம், இதயநோய், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்துகிறது. இது  நமக்கு சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் சேர்த்து தருகிறது. சிவப்பு அரிசியை அதிகமாக Processing செய்யாததால், இதில் ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து, வைட்டமின், மினரல், ஆன்டி ஆக்ஸிடென்ட்போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இது சாப்பிடுவதற்கு சற்று கரடுமுரடாக இருக்கும். மேலும் சமைப்பதற்கும் சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்.

சிவப்பு அவலில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. அதிகமான நார்ச்சத்து உள்ள சிவப்பு அவலை சாப்பிடும்பொழுது வயிறு முழுமையாக நிரம்பிய உணர்வைத் தரும். ஆகவே, உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

சிவப்பு அவலில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பி வைட்டமின்கள்  உள்ளன. இது உடலுக்குத் தேவையான சக்தியை கொடுக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிவப்பு அவல் நல்ல சாய்ஸ் ஆகும். இதை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம். ஏனெனில், சிவப்பு அவலில் Glycemic Index குறைவாக உள்ளது. அதனால், இரத்தத்தில் சர்க்கரையை அதிகப்படுத்தாமல் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

வெள்ளை அவல் வெள்ளை அரிசியிலிருந்து எடுக்கப்படுகிறது. வெள்ளை அரிசியிலிருந்து அவல் தயாரிக்கும்போது தவிடு போன்றவற்றை நீக்கிவிடுவதால், இதில் இருக்கும் வைட்டமின், மினரல் போன்ற பெரும்பாலான சத்துக்களும் நீக்கப்பட்டு விடுகின்றன.

இதையும் படியுங்கள்:
Yoga Vs Gym: உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?
Red Aval Vs White Aval

எனினும், வெள்ளை அவலை காலை உணவு செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், இதை சமைப்பது மிகவும் சுலபம். இதனுடைய சுவை Mild ஆக இருக்கும். எனவே, இனிப்பு மற்றும் காரம் இரண்டு சுவையிலும் செய்து உண்ணலாம், சாப்பிடுவதற்கும் மிருதுவாக இருக்கும்.

சிவப்பு அவல் மற்றும் வெள்ளை அவல் இரண்டுமே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றாலும், அதிக சத்துக்கள் இருப்பது சிவப்பு அவலில்தான் என்பதால் சிவப்பு அவலை தேர்வு செய்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com