உடல் எடையைக் குறைக்கும் மோமோஸ்!

உடல் எடையைக் குறைக்கும் மோமோஸ்!

மோமோஸ் சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என்று சொன்னால், பலரும் இதை நிச்சயமாக நகைச்சுவையாகத்தான் எடுத்துக் கொள்வார்கள். உடல் எடையைக் குறைக்கத் திட்டமிட்டால் பிடித்த உணவுகளை விட்டு விட வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. அதிலும் பலருக்கும் மிகவும் விருப்பமான மோமோஸ் ஆரோக்கியமற்றதாகவே பார்க்கப்படுகிறது. இதில் நிறைந்துள்ள அதிக கலோரிகளால் உடல் எடை அதிகரிக்கலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மோமோஸை தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மோமோஸ் சாப்பிட்டாலும் உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும். ஆனால், ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.  உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஆவியில் வேக வைத்த மோமோஸை தேர்வு செய்வது நல்லது. பொறிக்கப்பட்ட மோமோஸை தவிர்க்க வேண்டும். அதேசமயம், மைதாவில் செய்த மோமோஸிற்கு பதிலாக கோதுமை மாவு அல்லது சிறுதானிய மாவை கொண்டு தயாரித்த மோமோஸை சாப்பிட முயற்சிக்கலாம்.

சராசரியாக ஒரு பிளேட் வெஜிடபிள் மோமோஸில் (5 - 6) 280 கலோரிகள் வரை இருக்கலாம். ஆவியில் வேகவைத்த வெஜிடபிள் மோமோஸ் எடை இழப்புக்கான சரியான தேர்வாக இருக்கும். அதேசமயம், பொறிக்கப்பட்ட ஃப்ரைட் மோமோஸில் ஆவியில் வேக வைத்த மோமோஸை விட மூன்று மடங்கு அதிக கலோரிகள் இருக்கலாம். எனவே, உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் கட்டாயமாக ஃப்ரைட் மோமோஸை தவிர்க்க வேண்டும். மோமோஸை ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில், கலோரிகளின் அளவு அதிகரிக்கக்கூடும்.

மோமோஸ் செய்யும்பொழுது காய்கறிகளுடன் சீஸ், சிக்கன், முட்டைகோஸ் போன்றவற்றையும் ஸ்டஃப் செய்ய பயன்படுத்தலாம். இதன் மூலம் உடலுக்கு தேவையான புரதத்தையும் பெற முடியும். அதேசமயம், காய்கறிகளில் நிறைந்துள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள், ஊட்டச்சத்து தேவையையும் மோமோஸ் பூர்த்தி செய்கிறது. இதனுடன் பரிமாறப்படும் சட்னியில் அதிக எண்ணெயும், சோடியமும் இருப்பதால் இதைத் தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக வீட்டில் அரைத்த புதினா அல்லது கொத்தமல்லி சட்னியை எடுத்துக் கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com