சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறீர்களா? போச்சு! எச்சரிக்கும் நிபுணர்கள்!

Reuse of cooking oil.
Reuse of cooking oil.
Published on

சமையல் எண்ணெய் இல்லாத ஒரு உணவை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு இந்திய உணவுகளில் சமையல் எண்ணெய் ஒன்றியுள்ளது எனலாம். இது உணவுக்கு சுவை மற்றும் அமைப்பைத் தருகிறது. இருப்பினும் சில வீடுகள் மற்றும் கடைகளில் பொறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் செலவைக் குறைப்பதற்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியம் மற்றும் உணவின் தரம் மோசமடையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது அதிக வெப்பநிலை, ஆக்ஸிஜன் மற்றும் உணவுத் துகள்கள் கலப்பதினால் ரசாயன மாற்றங்களுக்கு உட்படுகிறது. இந்த மாற்றங்களால் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் உருவாகின்றன. இவை உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி இருதயநோய் அபாயத்தை அதிகரிக்கும். 

சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிக்கும்போது காற்று, வெப்பம் மற்றும் ஒளியின் தாக்கத்தால் ஆக்சிஜனேற்றம் ஏற்படுகிறது. இது எண்ணெயின் மூலக்கூறு கட்டமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் எண்ணையின் சுவை மாறி விரும்பத் தகாத வாசனையை வெளிப்படுத்துகிறது. மேலும் இத்தகைய ஆக்சிஜனேற்றப்பட்ட சமையல் எண்ணெயில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ராடிக்கல்கள் இருப்பதால் செல்லுலார் சேதத்தை ஏற்படுத்தி நாள்பட்ட நோய்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. 

அதிகமாக பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. குறிப்பாக பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் எண்ணெயில் செழித்து வளரக்கூடியவை. இதனால் சால்மனல்லா, ஈக்கோலை போன்ற உணவுப் பொருட்களால் ஏற்படும் நோய்கள் ஏற்படலாம். இது கடுமையான வயிற்று உபாதைகளை ஏற்படுத்தி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தான நிலைமைகளைக் கூட ஏற்படுத்தும்.

அதிகமாக பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் அதன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழக்கிறது. எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சமையல் செயல்முறைகளுக்கு உட்படுத்துவதால், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உட்பட அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கம் படிப்படியாகக் குறைகிறது. மேலும் இப்படி மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் எண்ணெயில் அக்ரிலமைடு என்ற ரசாயனக் கலவை உருவாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஒரு புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனமாகும். 

இதையும் படியுங்கள்:
Urban Cruiser Taisor: வெளியானது Toyota-வின் அடுத்த படைப்பு… மைலேஜ் அடிச்சுக்கவே முடியாது! 
Reuse of cooking oil.

இப்படி பல பாதிப்புகள் சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படுகின்றன. எனவே கடைகளில் எண்ணெயில் பொரித்த உணவுகளை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பிரெஞ்ச் ப்ரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பிற வருத்த தின்பண்டங்களில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகள் இருக்கலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு வீட்டிலேயும் ஒரே எண்ணையை அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com