

பெரும்பாலும் பக்கவாதம் ஏற்பட்டால் 4 மணி நேரத்திற்குள் ரத்த உறைவை தடுக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். 24 மணி நேரத்திற்குள் ரத்தக் கட்டிகளை அகற்ற வேண்டும். இதைத்தான் பொன்னான நேரம் எனக் குறிப்பிடுகிறோம். இது குறித்து நகரங்களில் வசிக்கும் மக்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்.
கிராமப்புற மக்களுக்கு போதிய அளவு விழிப்புணர்ச்சி இல்லை. முகம் ஒரு பக்கமாக இழுப்பது, தெளிவற்ற பேச்சு, பலவீனம் ஆகிவற்றை காணும் போது அவசர சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இதை செய்வதற்காக பி பாஸ்ட் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் 80 சதவீத பக்கவாதங்கள் தடுக்கக் கூடியதாக உள்ளது.
பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்பாக உடல் பலவீனம், பார்வை இழப்பு, பேசுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் வரும். இவை தான் அதன் ஆரம்ப கால அறிகுறிகள். நாம் அதை கவனிக்காமல் விட்டு விடுகிறோம்.
மார்பில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்கிறோம். ஆஞ்சியோகிராம் செய்து தேவைப்பட்டால் ஸ்டென்ட் (Stent) வைக்கிறோம். அதேபோன்று மூளைத் தமனிகளிலும் அடைப்புகள் வரலாம்.
மூளையின் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபடுகிறது. அதனால் மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணர முடியாது. இந்த ஆரம்ப அறிகுறிகளை நாம் கவனிப்பதில்லை.
உலகம் முழுவதும் பக்கவாதங்கள் நாட்டுக்கு தக்கவாறு வேறுபடுகிறது. மேற்கத்திய நாடுகளில் கழுத்து தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. ஆசிய மக்களின் 30 முதல் 50 சதவீதம் பேருக்கு மூளையில் உள்ள தமனிகளில் கொழுப்பு படிவதால் இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்படுகிறது. மூளையில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மூளை தமனிகள் சுருங்கக்கூடும் என பரிசோதனை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆஞ்சியோகிராம் டெஸ்ட்கள் மூலம் ரத்த ஓட்டம் சுருக்கம் ஏற்பட்டுள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிய முடிகிறது.
கரோடிட்டு எண்டோ டிராக்டமி (carotid endarterectomy (CEA)) மூலம் கழுத்து தமணியில் உள்ள அடைப்புகளை விரிவடைய செய்யலாம். இவை குறுகலான தமனிகளை விரிவடையச் செய்யும்.
ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் மிகவும் மென்மையானது. அதிக அளவில் செயல்படுகிறது. தீவிர பாதிப்பு இருந்தால் பெருமூளை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து அடைப்பட்ட தமனிகளை சுற்றி ரத்த ஓட்டத்தை சீராக்கலாம். பக்கவாதம் உள்ளவர்கள் மூளையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இதயத்தின் குறுகிய அடைப்பு தமணியை சரி செய்ய ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்படுவதை போன்று நியூரோ ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை மூளை பாதிப்பிற்கு செய்யப்படுகிறது.
இதன் மூலம் மூளையில் ஏற்படும் அடைப்புகளை ஸ்டென்ட் வைத்து சரி செய்யலாம் என்பது தற்போது நடைபெற்று வருகிறது. எனவே பக்கவாதம் உள்ளவர்கள் இதனை அலட்சியம் செய்யாமல் மூளையை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டியது அவசியம். அவ்வாறு ஏதேனும் அடைப்பு இருந்தால் அதனை ஸ்டென்ட் மூலம் சரி செய்யலாம். நவீன முறையில் உள்ள இந்த மருத்துவ பயனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)