

சுகாதார குறைபாட்டினால் நமது உடலில் பல்வேறு விதமான நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. ஈரமான ஆடைகளை உடுத்துவது, சுத்தமில்லாத இடங்களில் உள்ள கழிவறைகளை பயன்படுத்துவது, ஒரே ஆடையை இரண்டு மூன்று நாட்கள் பயன்படுத்துவது, நெருக்கமான உள்ளாடைகளை அணிவது, போன்ற காரணங்களால் படர்தாமரை என்னும் பூஞ்சை தொற்று தோலில் ஏற்படுகிறது.
இது சருமத்தில் சிறிய புள்ளியாக தோன்றி, பிறகு வட்ட வடிவில் பெரிதாக மாற்றம் அடைந்து, சருமம் சிவப்பு நிறத்தில் இருந்து கருப்பாக மாறிவிடுகிறது. படர்தாமரை உள்ள இடத்தில் அரிப்பு மிகவும் அதிகமாக காணப்படும். இந்த படர்தாமரையானது வீட்டில் ஒருவருக்கு வந்து விட்டால் மற்றவருக்கும் தொற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் இந்த படர்தாமரையிலிருந்து நாம் தொற்று ஏற்படாமல் இருக்க படர்தாமரை உள்ளவர்களின் ஆடைகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும், நாம் தனிமை படுத்த வேண்டும். இப்படி தனிமைப்படுத்தினால் மட்டுமே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாமல் தடுக்க முடியும். இவர்களுடைய ஆடைகளை சுடுதண்ணீரில் துவைத்தால் மட்டுமே இந்த பூஞ்சைக் கிருமிகள் சாகும்.
படர்தாமரை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரு வேளைகளிலும் நன்றாக குளித்து இந்த படர்தாமரை உள்ள இடங்களில் சுடுதண்ணீரை வைத்து நன்றாக கழுவ வேண்டும்.
நமது வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நாம் ஒரு சிறிய மருந்தை தயாரிக்க முடியும். இஞ்சி, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சை பழச்சாறு, மஞ்சள் தூள், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் இரவு நேரத்தில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு நன்றாக பூசி வந்தால் இந்த படர்தாமரை முற்றிலும் குணமடையும்.
இஞ்சி, வெள்ளைப் பூண்டு, மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு, வேப்ப எண்ணெய் இவை எல்லாவற்றிலும் பூஞ்சை பாக்டீரியாக்களைக் கொல்லும் வேதிப்பொருட்கள் அதிகமாக இருக்கிறது. ஆகையால் இதனை நாம் பயன்படுத்துவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)