சமீபத்திய ஆய்வின் படி , உடலில் வைட்டமின் டி யின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் டி நிறைவாக உள்ளவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.
அமெரிக்க செவிலியர்களின் நீண்டகால சுகாதார தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி பார்த்தபோது , உணவில் அதிகமாக வைட்டமின் டி உட்கொள்ளும் பெண்களுக்கு, குறைந்த அளவு வைட்டமின் டி உட்கொள்ளும் பெண்களை விட, பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 58 சதவீதம் குறைவாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
12,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை கொண்ட ஒரு பெரிய ஆய்வில் இரத்தத்தில் குறைந்த அளவில் வைட்டமின் டி உள்ளவர்களுக்கு, அதிக அளவு வைட்டமின் டி உள்ளவர்களை விட பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 31 சதவீதம் அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டது.
மற்றொரு ஆய்வில் அதிக அளவு வைட்டமின் டி உட்கொள்ளும் நபர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் தாக்கும் அளவு 25 சதவீதம் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது.
கண்காணிப்புத் தரவுகள் வைட்டமின் டி பயன்பாட்டைப் பின்பற்றுகிறது. ஆனால், இயக்கவியல் ஆய்வுகள், ஆய்வகத்தில் வைட்டமின் டி எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய வேண்டி உள்ளது. அதன் பாதுகாப்பு தன்மையையும் ஆராய பரிந்துரைக்கிறது. இது பற்றி இன்னும் பெரிய சோதனைகள் செய்யப்படவில்லை.
பொதுவாக வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து நிறைய கிடைக்கிறது. இந்த வைட்டமின்கள் தோலில் சேகரிக்கப்படுகிறது. வைட்டமின் டி ஏற்பிகள் , பெருங்குடல் திசுக்கள் உட்பட உடல் முழுவதும் காணப்படுகிறது. இந்த வைட்டமின் ஏற்பிகள் வீக்கம் தொடர்பான மரபணு செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.
மருத்துவ ஆய்வுகள் படி , வைட்டமின் டி இன் செயலில் உள்ள வடிவம் , வீக்கத்தை கட்டுப்படுத்தும். அசாதாரண செல்களைக் கண்டறியும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறனை அதிகரிக்கும். கட்டியின் இரத்த நாள வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் உயிரணுப் பிரிவை ஒழுங்குபடுத்தும் என்பதைக் காட்டுகின்றன. இவை சமீபத்திய ஆய்வில் நிரூபணம் ஆகியுள்ளன.
காலப்போக்கில் மருத்துவ ஆய்வுகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு, நன்மையான முடிவுகளை கண்டறியும். இரத்தத்தில் வைட்டமின் டி அதிகளவில் கொண்டவர்களுக்கு , பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து குறைந்து இருப்பது ஒரு நம்பிக்கையின் வெளிச்சத்தை அனைவருக்கும் தருகிறது. சூரிய ஒளி, உணவு அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் அதிக வைட்டமின் டி பெறுவது போன்ற எளிமையான விஷயங்களை பின்பற்றுவது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க கூடும்.
உடலில் வைட்டமின் டி யை குறைந்தபட்சம் 30 ng / mL பராமரிப்பது ஆபத்துகளிருந்து விடுபட வைக்கும். இது மிகவும் செலவு குறைந்த சுகாதார நடவடிக்கையாகும். இது முழுமையாக பாதுகாக்க இயலாது என்றாலும் வருமுன் காப்பதில் ஓரளவு நம்பிக்கையை கொடுக்கிறது. சூரிய ஒளி, உணவுமுறை அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் போதுமான வைட்டமின் டி அளவை பெறுவது ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
பெருங்குடல் புற்றுநோய் என்பது ஒரு மோசமான நோயாகும், அதைக் கையாள்வதற்கும் நுணுக்கமான சிகிச்சை முறைகள் தேவைப்படுகிறது. இப்போதைக்கு, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறை மாற்றங்கள், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் புதிய ஆராய்ச்சி வெளிவரும்போது தகவல்களைப் பெறுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வருமுன் காப்பது சிறந்தது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.