
மஞ்சாடி முத்துக்கள் என்பது மஞ்சாடி மரத்தின் (Adenanthera pavonina) விதைகளாகும். இந்த விதைகளை 'ஆனை குண்டுமணி' என்றும் அழைப்பதுண்டு. சிவப்பு நிறத்தில் பிரகாசமானதாகவும், தங்கம்போல் பெருமதிப்பு மிக்கதாகவும் உள்ளது இந்த வரம் தரும் மஞ்சாடி முத்துக்கள்.
மாலை மற்றும் ஆபரணங்கள்:
மஞ்சாடி முத்துக்கள் பழங்கால இந்தியாவில் தங்கம் போன்ற பெருமதிப்பு மிக்க மாலைகளை செய்ய பயன்படுத்தப்பட்டன. கழுத்தணிகள், மாலைகள் போன்றவற்றிலும் இந்த மஞ்சாடி முத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. பழங்காலத்தில் மஞ்சாடி விதைகளை வைத்து மாலையும் ஆபரணங்களும் செய்யப்பட்டன. மஞ்சாடி குரு, செல்வம் மற்றும் செழிப்புக்கான தெய்வம் மகாலட்சுமியின் அடையாளமாக கூறப்படுகிறது.
இந்த விதைகள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி பெற்றவை. நல்ல அதிர்ஷ்டத்தையும் தேடித்தரும் என்று நம்பப்படுகிறது. மஞ்சாடி விதைகளே பழங்கால இந்தியாவில் தங்கம் போன்ற பெறுமதிப்பு மிக்க மாலைகளை நிருப்பதற்கு பயன்படுத்தப்பட்டன.
குருவாயூர் கோயில்:
குருவாயூர் கோயிலில் மஞ்சாடி விதைகளை உருளியில் வைத்து நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஆன்மீகப் பயன்பாடு:
மஞ்சாடி விதைகள் அவற்றின் அற்புதமான தோற்றத்திற்காக மட்டுமல்லாமல் ஆன்மீக முக்கியத்துவத்திற்காகவும் மதிக்கப்படுகின்றன. சில இடங்களில் மஞ்சாடி விதைகளை ஆன்மிக ரீதியிலும் பயன்படுத்துகிறார்கள். பண்டிகைகள் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் கோவில் வளாகத்தை அலங்கரிக்க இந்த விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறது. இந்த விதைகள் தடைகளை நீக்கி பல்வேறு முயற்சிகளில் வெற்றியை தரும் என்றும் நம்பப்படுகிறது. இந்த விதைகள் பண்டைய வேதங்களிலும், பாரம்பரிய நடைமுறைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மஞ்சாடி மரம்:
மஞ்சாடி மரம் மண்ணின் நைட்ரஜன் அளவை சமப்படுத்துவதற்காக வளர்க்கப்படுகிறது. இதன் பூக்கள் சற்று நீளமாகவும் பூனை வால் போன்று கூந்தல் கொண்டும் அமைந்திருக்கும். இதன் பூக்கள் சிறியதாகவும், மணம் மிக்கதாகவும் பச்சை - மஞ்சள் நிறத்திலோ, கிரீம் நிறத்திலோ இருக்கும். இதன் தளிர்கள் சமைத்து உண்ணத்தக்கவை.
மஞ்சாடியின் இளம் காய்களை குரங்குகள் போன்ற விலங்குகள் விரும்பி உண்கின்றன. பச்சையாக இருக்கும் மஞ்சாடி விதைகள் ஓரளவு நச்சுத்தன்மை உள்ளனவாக இருந்தாலும், அவற்றை சமைக்கும்போது அவற்றினுடைய நச்சுத்தன்மை குறைந்து உண்ணத்தக்கதாக மாறுகின்றன.
மஞ்சாடி மரத்தின் வைரப்பகுதி மிகவும் கடினத்தன்மை கூடியதாகும். இதனை தோணி செதுக்குவதிலும், மரத் தளவாடங்கள் செய்வதிலும், விறகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இவை ஆசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் தாவர இனம் இது.
இதன் விதைகள் செந்நிறமாகவும், பிரகாசமானதாகவும் உள்ளது. இவை தெய்வீக ஆசீர்வாதங்களை பெறுவதற்காக பெரும்பாலும் சடங்குகள் மற்றும் பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள் வாகை மர இலைகளைப் போன்ற அமைப்புடையவை. இதன் இலைகள் வாதம் போக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
செழிப்பின் சின்னம்:
நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதும், செழிப்பை மேம்படுத்துவதாகவும் கருதப்படுவதால் இவை வீட்டில் பூஜை அறையிலோ அல்லது வீட்டின் மையப்பகுதியிலோ தெய்வத்தின் ஆசிர்வாதங்களைப் பெற வைக்கப்படுகிறது.
பாரம்பரிய ஆயுர்வேத நடைமுறைகளில் இதன் விதைகள் மன அழுத்தத்தை குறைத்து மனதை அமைதிப்படுத்தும் பண்புகளுக்காக தலையணைக்கு அடியில் வைத்து பயன்படுத்தப்படுகின்றன.
இயற்கை அழகுகொண்ட மஞ்சாடி விதைகள் தங்க நகை கடைகளில் எடை போடுவதற்கு பயன்படுத்தப் படுவதுடன், பழங்குடியினரால் இன்றுவரை அணிகலன்களாக செய்யப்பட்டு அணிந்து வரப்படுகிறது.
மலையாள புத்தாண்டில் (விஷு) காலையில் எழுந்தவுடன் முதலில் பார்க்கும் நல்ல பொருட்களில் இந்த மஞ்சாடி விதைகளும் இடம் பிடித்துள்ளன. இயற்கையோடு இயந்த வாழ்க்கை வாழும் மனிதர்களால் இன்றுவரை இவை அழியாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.