பெண்களின் நலன் காப்பதில் வைட்டமின்களின் பங்கு!

Role of vitamins in women's well-being
Role of vitamins in women's well-beinghttps://healthguidesblog.com

பொதுவாகவே, தற்போது பலர் வைட்டமின் குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். வைட்டமின்கள் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. 13 வைட்டமின்கள் பெருவாரியாக பயன்பட்டு வருகின்ற நிலையில், சில வைட்டமின்கள் மட்டும் பெண்கள் நலனில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

வைட்டமின் சி பெண்களுக்கு ஏற்படும் ஜலதோஷத்திலிருந்து புற்றுநோய் வரை எல்லா நோய்களையும் தடுக்கவல்ல சக்தி கொண்டதாகும். அஸ்கார்பிக் அமிலம் எனும் வைட்டமின் சியில் உள்ளதாக அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக மருத்துவ அறிஞர் டாக்டர் டி மோத்தி மெக் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் சி முக்கியமானது. இது ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும். இது சிந்தனை மற்றும் புரிந்துகொள்ளும் சக்தியை அதிகரிக்கிறது.

இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால், ஞாபக மறதி ஏற்படும் அபாயம் உள்ளது. இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க, அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, உடலில் இரும்புச்சத்து குறைபாடு தவிர்க்க வைட்டமின் சி அவசியம். பெண்களின் சருமம் மற்றும் முடிக்கு மிகவும் முக்கியமானது வைட்டமின் சி. இது கொலாஜன் உற்பத்தி, ஃப்ரீரேடிக்கல்கள் மற்றும் சருமத்தில் சூரிய ஒளியின் சேதத்தை நிர்வகிக்கிறது. இது மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும், கருவின் வளர்ச்சிக்கு அவசியமானதாகவும் கருதப்படுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, காலை உணவில் வைட்டமின் சி உட்கொள்வது அதிக நன்மை பயக்கும். இது நாள் முழுவதும் ஆற்றலைப் பராமரிக்கும் மற்றும் உங்களை சுறுசுறுப்பாக உணர வைக்கும். நீங்கள் அடிக்கடி சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தால், கண்டிப்பாக வைட்டமின் சி பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

வைட்டமின் சி உடலில் சேமிப்பில் இருக்காது. எனவே, இவற்றை ஆரஞ்சு, தக்காளி, திராட்சை, நெல்லி போன்ற பழங்களை தினமும் 200 கிராம் உணவின் மூலம் எடுத்துக்கொண்டே இருந்தால் மரபு அணுக்கள் கெடுவது, டி.என்.ஏ உடைவது, முதுமை தோற்றம் உண்டாவது முதலியவை இயற்கையாகவே தடுக்கப்படுகின்றன என்கிறார்கள். சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் சி உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, நீங்கள் கோடையின் வெப்பத்தை தாங்க முடியும்.

மூட்டு வலி, மூட்டு எலும்பில் அழற்சி ஏற்பட்டு எலும்பு தடம் மாறும் நோய்களுக்கு தினமும் 120 மில்லி கிராம் வைட்டமின் சி சாப்பிட சிபாரிசு செய்கிறார்கள். பெண்களுக்கு 70 மி.கி போதுமானது. உணவின் மூலமோ அல்லது வேறு வைட்டமின் மாத்திரைகள் மூலமாகவோ நாள் ஒன்றுக்கு 2000 மி.கி. மேல் உடலில் வைட்டமின் சி சேர்ந்தால், ‘டையோரியா’ வரும் அபாயம் உண்டு.

நமது உடலில் தினந்தோறும் ஏகப்பட்ட செல்கள் உருவாகின்றன. இறந்த செல்கள் அழிக்கப்படுகின்றன. இப்படி செல்கள் அழிக்கப்படாமல் அவை வளர்வதால்தான் கேன்சர்கள் உருவாகின்றன. வைட்டமின் ஈ இறந்த செல்களை நீக்கும் மகத்தான பணிகளை மேற்கொண்டு உடலில் கேன்சர் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் மிக்கது. பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது வைட்டமின் ஈ தான்.

இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால்தான் இதய சம்பந்தமான நோய்கள் வருகின்றன. இதனை தடுக்கும் ஆற்றல் வைட்டமின்கள் ஈ க்குதான் உண்டு என்கிறார் ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் மைய ஆராய்ச்சியாளர் எரிக்ரிம். தினசரி 100 IU வைட்டமின் ஈ சாப்பிட, மாரடைப்பு வராது என்பது ஆய்வில் தெரிய வந்தது. தினசரி 600 IU வைட்டமின் ஈ சாப்பிட்ட பெண்களுக்கு மாரடைப்பு வரவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது.

வைட்டமின் ஈ யின் தேவை நாள் ஒன்றுக்கு 15 மில்லி கிராம். அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 1000 மில்லி கிராம் எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் ஈ உடம்பில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தும். நோய்களை உருவாக்கும் பிரிரோடிக்கல்களை எதிர்த்து போராடும். சூரியகாந்தி விதைகள், வேர்க்கடலை, வெண்ணெய், பாதாம், எள் போன்றவற்றில் வைட்டமின் ஈ நிறைய உள்ளது.

வயதாவதால் வரும் ஞாபக சக்தி குறைபாட்டையும், கவனக்குறைவையும், சுறுசுறுப்பின்மையையும் பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் வைட்டமின் ஈ உணவுகளுக்கு உண்டு என்கிறது சிகாகோ மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு. இரத்தத்தில் வைட்டமின் ஈ குறைவாக உள்ள முதியவர்களுக்கு உடல் உறுப்புகள் விரைவில் வலிமையற்று உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
உறவுகளைப் பேணுவதிலேயே உள்ளது மகிழ்ச்சி!
Role of vitamins in women's well-being

காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள வைட்டமின் சி யும் ஈ யும் நுரையீரலை என்றென்றும் பாதுகாக்கும் உணவுகள் என்கிறார்கள் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். வைட்டமின் சி யும், ஈ யும் இணைந்து பெண்களுக்கு பிரசவ காலத்தில் வரும் இடர்பாடுகளை தவிர்க்க உதவுவதாகக் கண்டறிந்துள்ளனர். பெண்களுக்கு பிரசவ காலத்தில் வரும் ஒரு நோய், ‘பிரிஎக்லாப்சியா.’ அதிகப்படியான இரத்த அழுத்தம், புரோட்டீன் சிறுநீரில் கலந்து வயிற்றை சுற்றி நீர் கோர்த்துக் கொள்வது போன்ற சிரமங்களை பிரிஎக்லாப்சியா என்பர். இது பிரசவ நேரத்தில் ஏற்படும். இக்குறைபாட்டை களைய தினமும் 400 IU வைட்டமின் ஈ யும், 1000 மி. கி வைட்டமின் சி யும் எடுத்துக் கொண்டால் 76 சதவீதம் பிரிஎக்லாப்சியா குறையும் என்கிறார்கள்.

ஃபோலேட் வைட்டமின் B9 என்றும் அழைக்கப்படுகிறது. ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க இந்த வைட்டமின் முக்கியமானது. சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெண்களுக்கு ஏற்படும் சில குறைபாடுகளை சரி செய்வதற்கும் இது முக்கியம். உங்கள் உணவில் ஃபோலேட் பெற, நீங்கள் பட்டாணி, புரோக்கோலி அல்லது பச்சை இலைக் காய்கறிகளை உட்கொள்ளலாம். பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வைட்டமின் பி12 இன்றியமையாதது. இது உடலின் ஆற்றலைப் பராமரிக்க உதவுகிறது. தவிர, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com