
பாலிவுட் நடிகர் சல்மான்கான் Aneurysm என்ற நரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாராம். இதை Trigeminal neauralgia என்று கூறுகிறார்கள். மூளையில் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் விளைவே இது. இதற்குக் காரணம் உடலையும் மனதையும் மிகவும் வருத்திக் கொள்வது தானாம். சல்மான் கானுக்கு 2011ம் ஆண்டு Trigeminal neuralgia பாதிப்பிற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது மேலும் இரண்டு பிரச்சனைகளால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவை brain aneurysm மற்றும் Arteriovenous malformation என்று கூறப்படுகின்றன.
Brain aneurysm
இது மூளை ரத்த நாளத்தில் ஏற்படுகிறது. பலூன் வடிவில் காணப்படும் இது இரத்தம் தான். இது வளர்ந்து வெடித்தால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுமாம்.
இந்த பாதிப்பிற்கு Hemorrhagic stroke என்று பெயராம். இது அதிக இரத்த அழுத்தத்தினாலும், மன அழுத்தத்தாலும், மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணங்களால் ஏற்படுவதாக தெரிகிறது. இவை scan மூலம் மட்டுமே கண்டறியப்படுகிறது.
Arteriovenous malformation (AVM)Z சாதாரணமாக இரத்தம் தமனியிலிருந்து நரம்பிற்கு மெதுவாகச் செல்லும். ஆனால் AVM நிலையில் மிக வேகமாக இரத்தம் செல்லும். இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். பேசுவதில் சிரமம் தலைவலி, வலிப்பு, காதில் சத்தம் கேட்டல் போன்றவை மேற்கூறிய பாதிப்பை ஏற்படுத்தும்.
Trigeminal neuralgia
இது முகத்தில் ஷாக் அடித்தது போன்ற வலியை ஏற்படுத்தும். திடீரென்று இது ஏற்படலாம். இதனால் சாப்பிடுவது, பல் துலக்குவது மற்றும் சிரிப்பதற்குக் கூட கஷ்டமாகும். இது முகத்தை கட்டுப்படுத்தும் Trigeminal நரம்பு பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது.
மேற்கூறிய அனைத்து பாதிப்புகளும் சல்மான் கானிற்கு ஏற்பட முக்கிய காரணம் அதிக வேலை, தூக்கமின்மை போன்றவைகள் தான் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிகமாக வருத்திக் கொண்டால் இந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)