அது எப்படி? ஒரே மருந்து, வேறு பெயர், குறைந்த விலை!

Generic medicines
Generic medicines
Published on

பிராண்டட் மருந்துகள்(Branded medicines) என்பது முதல் முதலில் ஒரு மருந்தை கண்டுப்பிடித்து, ஆராய்ந்து, சோதனைகளுக்கு உட்படுத்தி அது மக்களுக்கு பாதுகாப்பானதா? என்பதை பரிசோதித்த பிறகு விற்பனைக்கு கொண்டு வரப்படும் மருந்தாகும்.

இப்போது ஒரு கம்பெனி ஒரு மருந்தை தயாரிக்கிறது என்றால்,  கம்பெனிகாரர்கள் அந்த மருந்தை கண்டுப்பிடிக்க பல கோடி ரூபாய் செலவழித்திருப்பார்கள். ஒரு மருந்தை கண்டுப்பிடித்து அதை பலதரப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி Regulation Approval வாங்குவதற்கு 1.5 முதல் 2 பில்லியன் டாலர் வரை செலவாகும். ஒரு மருந்து வெளிவருவதற்கு ஒரு கம்பெனிக்கு கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடி செலவாகும்.

ஒரு மருந்து வெற்றியடைந்து விட்டது என்றால் அந்த மருந்து கம்பெனி 20 வருடங்கள் அவர்கள் மட்டுமே அதை விற்க முடியும் என்று Patent வாங்கி விடுவார்கள். 20 வருடம் Patent முடிந்த பிறகு வேறு மருந்து கம்பெனிகள் வேறு வேறு பெயர்களில் அந்த மருந்தை உற்பத்தி செய்து விற்க முடியும். இதை தான் நாம் ஜெனரிக் மருந்துகள் என்று சொல்கிறோம்.

ஒரு மருந்தை தயாரித்த கம்பெனியிடம் அந்த மருந்து சற்று விலை அதிகமாகவே இருக்கும். மற்றவர்கள் அதே மருந்தை தயாரிக்கும் போது Bioequivalence என்ற விஷயத்தை நிரூபிக்க வேண்டும். உதாரணத்திற்கு கொலஸ்ட்ரால் மாத்திரையில் 10 mg Atorvastatin இருக்கிறது என்றால் அதற்கு ஏற்ற மாதிரியே தயாரிக்கும் ஜெனிரிக் மருந்தும் நம் உடலில் அந்த ஒரிஜினல் மருந்து போலவே செயல்பட வேண்டும். இதை தான் Bioequivalence என்று கூறுகிறார்கள். Patent முடிந்த பிறகு மற்ற கம்பெனிகள் அந்த மருந்தை தயாரிக்க அதற்கான Raw material இருந்தாலே போதுமானது என்பதால் அவர்களால் அந்த மருந்தை விலை மலிவாக கூட விற்க முடியும். 

ஜெனிரிக் மருந்தை வாங்கி பயன்படுத்தலாமா?

1. எந்த மருந்து கம்பெனியாக இருந்தாலும் GMP (Good Manufacturing Practices) என்ற கட்டுப்பாடுகளை பின்பற்றியிருக்க வேண்டும். அப்படியில்லாத மருந்துகள் மிகவும் தரக்குறைவாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

2. 2017 க்கு முன்பு தயாரித்த மருந்துகள் அனைத்தையும் ஒரிஜினல் மருந்து போலவே வேலை செய்கிறதா? என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை... அதாவது, Bioequivalence நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. 2017 க்கு மேல் Approval ஆன மருந்துகளுக்கு தான் இந்த சட்டம் பொருந்தும் என்பதால் பாதுகாப்பை கருத்தில் கொள்வது முக்கியம்.

இதையும் படியுங்கள்:
பலரும் அறியாத 'விராலி'... மூட்டு, தசை வலிக்கு நல்ல நிவாரணி! எண்ணெய் செய்வது எப்படி?
Generic medicines

*பிராண்டட் மருந்துகளில் இருக்கும் அதே Active ingredients ஜெனிரிக் மருந்துகளில் இருக்கிறது. பிராண்டட் மருந்துகள் செய்ததை போல பல ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் ஜெனிரிக் மருந்துகள் விலை மலிவாகவும், மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும்.

*Trade mark சட்டத்தின்படி, ஜெனிரிக் மருந்துகள் பிராண்டட் மருந்துகளை போலவே அச்சு அசலாக தயாரிக்க கூடாது என்பதால் நிறம், சுவை போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். எனினும், இதனுடைய Dosage, safety, effectல் எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜெனிரிக் மருந்தைப் பயன்படுத்துதில் ஒரு பிரச்சனையும் இல்லை.

இதையும் படியுங்கள்:
பிரட் பிரியர்களே கவனம்! இந்த 5 பேர் மறந்தும் பிரட்டை தொடாதீர்கள்!
Generic medicines

ஜெனிரிக் மருந்துகள் இந்தியாவினுடைய பொருளாதாரத்திற்கு வரவேற்க வேண்டிய விஷயம் தான். ஆனால், அதேசமயம் Branded medicines ஐ முழுமையாக நிராகரிக்கவும் முடியாது. ஜெனிரிக் மருந்துகளின் Quality, நம்பகத்தன்மை, Bioequivalence ஆகியவற்றை சரிப்பார்த்து அரசாங்கம் பாதுகாப்பான முறையில் விற்பனைக்கு கொண்டு வருவது முக்கியம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com