நோய்களை விரட்டும் சாத்வீக உணவுகள் என்றால் என்ன தெரியுமா? 

Sathveega foods
Sathveega foods are that ward off diseases!
Published on

நம் உடல் சீராக இயங்குவதற்கு நாம் உண்ணும் உணவுகள் மிகவும் முக்கியமானவை. ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் உணவு என்பது வெறும் ஊட்டச்சத்து மட்டுமல்ல, நம் மனதையும் உடலையும் கட்டுப்படுத்தும் ஒரு ஆற்றல்மிக்க கருவியாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தைத் தரும் சாத்வீக உணவுகள் பற்றிய விவரங்களை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளப் போகிறோம். 

சாத்வீக உணவு என்பது சாத்வீக குணத்தை அதிகரிக்கும் உணவுகளைக் குறிக்கிறது. சாத்வீக குணம் என்றால் தூய்மை, அமைதி, நேர்மறை ஆற்றலுடன் தொடர்புடையது. சாத்விக உணவுகள் பொதுவாக இயற்கையாகவே வளரும், பதப்படுத்தாத, எளிமையான உணவுகளாகும். இவற்றில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவை அடங்கும். 

நன்மைகள்: 

சாத்வீக உணவுகளை தொடர்ந்து உண்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. 

இயற்கையான நார்ச்சத்து நிறைந்த சாத்வீக உணவுகள், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கின்றன. மேலும், இவை மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தம், பதட்டத்தை குறைக்கின்றன. 

சாத்விக உணவுகள் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டவை என்பதால், எடை இழப்புக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த உணவுகள் நம் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட ஆயுளுடன் இருக்க உதவுகிறது. 

இத்தகைய உணவுகளை தினசரி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக, என்றும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். காலையில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. மதிய வேளையில் தானியங்கள், பருப்பு வகைகள் நிறைந்த உணவை உண்ணுங்கள். இரவுக்கு எளிதில் ஜீரணமாகக் கூடிய காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். 

இதையும் படியுங்கள்:
தேங்காய் லட்டு, உலர் பழங்கள் லட்டு மற்றும் பூரி லட்டு வகைகள்!
Sathveega foods

நொறுக்கு தீனி ஏதேனும் சாப்பிட விரும்பினால், பழங்கள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இதற்கு இடையே நீர், பழச்சாறுகள், மூலிகை தேநீர் அதிகமாக குடிப்பது, உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

சாத்வீக உணவுகள் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. இது நம்மை பல நோய்களிலிருந்து பாதுகாத்து, நம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. எனவே, தினசரி உணவில் சாத்வீக உணவுகளை சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முயற்சிப்போம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com