'அஸ்வகந்தா' பெயர் காரணம் தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

 Ashwagandha
Ashwagandha
Published on

தற்போது உள்ள காலக்கட்டத்தில் நிறைய மூலிகைகளை மக்கள் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மூலிகையில் அஸ்வகந்தாவும் ஒன்றாகும். தற்போது இதன் பலன் அறிந்து நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

அஸ்வகந்தா காலம் காலமாக நம்முடைய ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையாகும். அஸ்வகந்தாவை Adaptogens என்று கூறுவார்கள். அதாவது உடலில் ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு போன்றவற்றை குறைக்க அஸ்வகந்தாவை எடுத்துக்கொள்ளலாம். அஸ்வகந்தா செடியின் வேரிலிருந்து இந்த பொடி தயாரிக்கப்படுகிறது. ‘அஸ்வா’ என்றால் குதிரை ‘கந்தா’ என்றால் வாசனை என்று பொருள். நனைந்த குதிரையின் வாசனையை ஒத்திருக்கும் இந்த வேர் என்று சொல்லப்படுகிறது.

அஸ்வகந்தாவில் உள்ள Chemical propertiesக்கு முக்கியமான காரணம் Alkaloids. இதில் முக்கியமாக ஸ்ட்ரெஸ் போன்றவற்றை குறைப்பதற்கு withaferins, withanaloids ஆகியவை இருக்கின்றது.

இந்தியாவில் தான் அஸ்வகந்தா பற்றிய ஆராய்ச்சிகள் அதிகமாக செய்யப்பட்டுள்ளது. இதை எடுத்துக் கொள்ளும் போது ரிலாக்ஸ்டாக உணர்வதாகவும், தூக்கம் நன்றாக வருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, தூக்கத்திற்காக எடுக்கப்படும் Herbal supplements ல் அஸ்வகந்தாவை சேர்த்துக்கொள்வது பயனளிக்கும்.

எனினும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது.

இதை நீண்டகாலம் பயன்படுத்தும் போது கல்லீரல் சம்மந்தமான பிரச்னைகள் வரலாம் என்று சொல்லப்படுகிறது.

அஸ்வகந்தாவை தினமும் எடுத்துக் கொள்வதால் நல்ல ஆற்றல், உடல் வலிமைக் கிடைக்கும். உடலில் நோய் தாக்காமல் நோயெதிர்ப்பு மண்டலத்தை நன்கு பலப்படுத்தும். அஸ்வகந்தாவை தொடர்ந்து எடுத்து வந்தால் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அஸ்வகந்தாவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் உள்ளன. இது உடலில் சேரும் கொழுப்புகளை கட்டுப்படுத்துவதால், தமனிகளில் அடைப்பு மற்றும் இதயத் தடுப்பு போன்ற இதயம் சம்மந்தமான பிரச்னைகளை குறைக்க உதவுகிறது.

ஆண்களின் ஹார்மோன் என்று சொல்லப்படும் Testosterone ஐ அதிகரிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு நல்ல அறிவாற்றலையும், நியாபக சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. அஸ்வகந்தா விளையாட்டு வீரர்களுக்கு Vo2 max ஐ அதிகரிக்க உதவுகிறது. ஒருநாளைக்கு 300 முதல் 500 மில்லி கிராம் வரை அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் இதை எடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின்   ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.)

இதையும் படியுங்கள்:
ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தக் கூடிய 5 மூலிகைகள்!
 Ashwagandha

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com