சின்ன பூச்சி பெரிய பிரச்னை: கொசுக்கடிக்கு வைத்தியம்... அறிவியல் தரும் விளக்கம்!

Mosquito bite
Mosquito bite
Published on

கொசுக்கள் மனிதர்களுக்கு மிகப்பெரிய தொல்லை தரும் பூச்சி இனமாகும். அதுவும் மழைக்காலம் வந்துவிட்டால் போதும் கொசுக்களின் தொல்லை தாங்க முடியாது. இவை கடித்த இடத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு போன்றவை ஏற்பட்டு எரிச்சலூட்டும். அதுமட்டுமின்றி, இவை நோய்களையும் அதிகம் பரப்புவதால் கொசுக்கள் மிகவும் அபாயகரமானவை.

இதுவரை கொசுக்கடிக்கான(Mosquito bite) தீர்வாக பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும், விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம். இதன் மூலமாக கொசுக்கடி வைத்தியத்திற்கு பின்னால் உள்ள அறிவியலை புரிந்துகொண்டு, தேவையில்லாமல் பிறர் சொல்லும் பொய்களிலிருந்து உண்மையை அறிந்து கொசுக்கடிக்கான சரியான தீர்வுகளைக் கண்டறியலாம்.

கொசுக்கடிக்கான வைத்தியமாக அறிவியல் என்ன சொல்கிறது?

ஐஸ் பேக்குகள்: கொசுக்கடிக்கு அறிவியலாளர்கள் பரிந்துரைக்கும் முதல் வைத்தியம் என்னவென்றால், ஐஸ் பேக் பயன்படுத்துவது தான். விஞ்ஞான ரீதியாக குளிர்ந்த வெப்பநிலை, கொசு கடித்ததினால் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்கவும், அந்த பகுதியில் உள்ள நரம்புகளை மரத்துப்போகச் செய்து அரிப்பினை போக்கவும் உதவும். ஐஸ் பேக் பயன்படுத்துவதால் கொசு கடிக்கும்போது செலுத்தப்பட்ட அதன் உமிழ்நீரின் எதிர்வினை உடலில் குறைகிறது. இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேற்பூச்சு: கொசு கடித்ததால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் அரிப்பைக் குறைக்க ஆன்ட்டிஹிஸ்டமின்கள் அடங்கிய கிரீம் அல்லது லோஷனைப் பயன்படுத்தலாம். இதனால் கொசு கடிக்கும்போது தூண்டப்படும் ஹிஸ்டமின்கள் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக அரிப்பு மற்றும் வீக்கம் குறையும்.

பேக்கிங் சோடா பேஸ்ட்: பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து செய்யப்படும் பேஸ்ட்டை கொசு கடித்த இடத்தில் தடவினால், அது அரிப்பையும் வீக்கத்தையும் உடனே குணமடையச் செய்வதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இந்த வைத்தியம் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். மறுபுறம், இது காலம்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இவற்றின் செயல்திறன் சிறப்பாக உள்ளது என்பதற்கு அறிவியல் சான்றுகள் குறைவாகவே உள்ளன.

இதையும் படியுங்கள்:
கல்லீரலில் குறைபாடு கைகளில் தெரியும்... இது உங்களுக்குத் தெரியுமா?
Mosquito bite

கற்றாழை ஜெல்: கற்றாழைக்கு இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கொசுக்கள் உட்பட எந்த பூச்சி கடித்தாலும் அதனால் ஏற்படும் அசௌகரியத்தை கற்றாழை ஜெல் சரி செய்யும் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com