கடல் பக்தார்ன் எண்ணெய்: சகல நோய்களையும் தீர்க்கும் அதிசய மூலிகையா?

இமயமலையின் அற்புத பெர்ரி தரும் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ உண்மைகள்!
கடல் பக்தார்ன் எண்ணெய்
கடல் பக்தார்ன் எண்ணெய்
Updated on

கடல் பக்தார்ன் எண்ணெய் (Sea Buckthorn Oil) பலவிதமான நோய்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதியில் நிவாரணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது‌. இது கடல் பக்தார்ன் பெர்ரியின் இலை, பழம் மற்றும் கொட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது‌. எல்லாவித நோய்களைத் தீர்க்கும் காயகல்பமான இந்த எண்ணெயின் எண்ணற்ற நன்மைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

இந்தப் பழம் ஹிமாலயப் பகுதிகளில் விளையக்கூடியது‌. மிக உயர்ந்த மலைப் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது.

கடல் பக்தார்ன் எண்ணெய் நன்மைகள்:

  • இதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, பி, சி, கே, ஈ, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், காப்பர் மற்றும் எபிகாலோகாடெசின் என்ற பாலிஃபினால்கள், ஃப்ளேவினாய்டுகள் மற்றும் ஒமேகா 3, 6 7, 9 அமிலங்கள் நிறைந்துள்ளன. இதன் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் வயதாவதைத் தடுக்கிறது. இளமையைத் தக்க வைக்கிறது. இது கொலஸ்டிராலைத் தடுக்கிறது‌. அதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இந்த எண்ணெயில் மட்டுமே அழற்சியைக் குறைக்கக்கூடிய ஒமேகா 7 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது‌.

  • இந்த எண்ணையில் ஈ ஆன்டி ஆகசிடண்டஸ், கரோடினாய்டுகள் மற்றும் ஈ சத்துக்கள் உள்ளதால் சரும ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. இதில் பாமிடோலெய்க் என்ற ஒமேகா 7 கொழுப்பு அமிலம் உடல் காயங்களையும் புண்களையும் ஆற்றுகிறது‌. இதில் உள்ள ஒமேகா 6 அமிலம் முகப்பருவைத் தடுப்பதுடன் உச்சந்தலை முடியையும் காக்கிறது. இது அல்ட்ராவயலெட் கதிர்களில் இருந்தும் பாதுகாப்பு தருகிறது. இதன் ஒமேகா 7 கொழுப்பு அமிலம் கொலாஜனை அதிகரிக்கிறது. இது பிக்மெண்டேஷனைத் தடுக்கிறது.

  • இதில் உள்ள ஃபைடோ ஸ்டீராய்டுகள் கெட்ட கொலஸ்டிராலைக் குறைப்பதாலும் மேலும் இதில் உள்ள க்வெர்செடின் இதயத்தைக் காப்பதால் ரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இரத்த நாளங்களில் அடைப்பு நீக்கப்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மாரடைப்பு தடுக்கப்படுகிறது‌.

  • இது இரத்தச் சர்க்கரையைக் குறைக்கக்கூடிய பண்பை பெற்றது‌. 2018ம் ஆண்டு செய்த ஆராய்ச்சியில் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் 38 பேர்களுக்கு தொடர்ந்து இந்த எண்ணெய் கொடுக்கப்பட்டு அதன் பிறகு அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களின் ரத்தச் சர்க்கரையின் அளவு வெகுவாகக் குறைந்தது தெரியவந்தது.

  • இதில் உள்ள பால்மிடோலிக் அமிலம் அழற்சியைக் குறைத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  • இதில் ஆரோக்கிய கொழுப்புகள், கரோடினாய்டுகள் மற்றும் ஈ சத்து நிறைந்துள்ளதால் கல்லீரலைப் பாதுகாக்கிறது‌. கல்லீரல் பாதுகாப்பிற்கு மிகச் சிறந்தது.

  • இதில் உள்ள Quercetin புற்றுநோயைத் தடுக்கக் கூடிய பண்புகளைப் பெற்றது‌

கடல் பக்தார்ன்
கடல் பக்தார்ன்
  • இது செரிமான சக்தியை சீராக்குகிறது‌ பெண்களுக்கு மெனோபாஸ் பிரச்னைகளை தீர்க்கிறது‌‌. இதில் உள்ள ஃபைடோ நியூட்ரியண்டுகள் ஹார்மோன்களை சமச்சீராக்கி பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்கிறது.

  • 2019ம் ஆண்டின் ஆராய்ச்சியின் படி இந்த எண்ணை கண் எரிச்சல் மற்றும் கண்சிவத்தலைத் தடுக்கக் கூடியது என அறியப்பட்டிருக்கிறது.

  • இதில் உள்ள லெசிதின் என்ற பொருள் முடியின் அதிக எண்ணைப் பசையை தடுத்து முடியை ஆரோக்கியமாக வைக்கக் கூடியதாகவும், இதில் உள்ள ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலம் முடி வளர்ச்சியைத் தூண்டி அதை ஆரோக்கியமாகவும் நெகிழ்ச்சியாகவும் வைக்கிறது.

  • இது பசியைக் கட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோன்களை உருவாக்குகிறது. உங்கள் உடல் எடையை சமச்சீராக வைக்க ஒமேகா 7 நிறைந்த இந்த எண்ணை மிகச் சிறந்ததாகும்‌.

  • இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் ஃப்ரீராடிகல்களின் சேதத்திலிருந்து பாதுகாக்கும் பண்பைப் பெற்றது.

  • இந்த எண்ணையில் கரையாத கொழுப்புசத்துக்கள் நிறைந்த காமா லினோலிக் அமிலம் உள்ளதால் சருமப் பிரச்சனைகளான ரோசாசியா, எகாசிமா போன்ற பிரச்னைகளுக்கும் சிறந்தது.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com