Sea Moss: தைராய்டை குணப்படுத்தும் கடல் பாசி! 

Sea Moss and Thyroid Gland
Sea Moss
Published on

கடல்பாசி, அறிவியல் ரீதியாக Chondrus Crispus என அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடற்கரையில் வளரும் ஒருவகை கடற்பாசி ஆகும். பல நூற்றாண்டுகளாகவே இதன் ஈர்க்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளுக்காக மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பிய கடல்பாசி, நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் உதவி பல நன்மைகளை வழங்குகிறது. 

  1. அதிக ஊட்டச்சத்துக்கள்: இந்த கடல்பாசியில் ஆரோக்கியத்திற்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. மேலும் இதில் கால்சியம் மக்னீசியம் பொட்டாசியம் மற்றும் இரும்பு ஆகியவை உள்ளதால், எலும்புகள் தசைகள் மற்றும் ரத்த சிவப்பணுக்களை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. 

  2. செரிமான ஆரோக்கியம்: கடல்பாசியில் உள்ள அதிக நார்ச்சத்து மேம்பட்ட செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். இது ஒரு பிரீபையாடிக் ஆக செயல்பட்டு, நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே கடல்பாசி அஜீரணம், வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சனைகளை ஆற்றும். 

  3. தைராய்டு செயல்பாடு: கடல்பாசியில் அதிக அளவு அயோடின் இருப்பதால், இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டுக்கு பெரிதளவில் உதவுகிறது. இதனால் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஹார்மோன்கள் முறையாக உற்பத்தி செய்யப்படுகின்றன. உங்கள் உணவில் கடல்பாசியை சேர்த்துக் கொள்வதால் தைராய்டு பிரச்சனையை நிர்வகிக்க முடியும். 

  4. சரும ஆரோக்கியம்: சரும ஆரோக்கியம் மற்றும் சருமத்தை மேம்படுத்துவதில் கடல்பாசி பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இதில் நிறைந்துள்ள விட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், சருமத்தை அழகாக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது. அரிப்பு, எரிச்சல், அழற்சி, முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளிலிருந்து விடுபட கடல்பாசி உதவுகிறது. 

  5. இதய ஆரோக்கியம்: கடல்பாசியில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்றாகும். பொட்டாசியம் குளோரைடு ரத்த அழுத்த அளவை பராமரித்து, இதய செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. எனவே நீங்கள் அவ்வப்போது உணவில் கடல்பாசியை சேர்த்துக்கொண்டால் இதய நோய் சார்ந்த அபாயங்களைக் குறைக்கலாம். 

இதையும் படியுங்கள்:
நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!
Sea Moss and Thyroid Gland

இப்படி கடல்பாசி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் அதை மிதமாகவே உட்கொள்ள வேண்டும். குறிப்பாக சீரான உணவின் ஒரு பகுதியாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இதுபோன்ற புதிய உணவுகளை நீங்கள் சாப்பிடுவதற்கு முன் ஒரு சுகாதார நிபுணறுடன் கலந்தாலோசிப்பது நல்லது. குறிப்பாக, உங்களுக்கு முன்கூட்டியே ஏதேனும் சுகாதார பிரச்சனைகள் இருந்தால், கட்டாயம் மருத்துவரை அணுகி இந்த உணவை எடுத்துக் கொள்வது பற்றி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com