கோவக்காய் பற்றிய ரகசியம் தெரியுமா மக்களே!

Scarlet gourds
Scarlet gourds
Published on

நாம் உண்ணும் உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருந்தால் மட்டுமே நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்வது மிக அவசியம். அதிலும் எந்த காய்கறிகள் உடல்நலத்திற்கு அதிக ஊட்டச்சத்துக்களை தருகின்றன என்பதை அறிந்துக் கொண்டு சாப்பிட வேண்டும். சில காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி தவிர்க்க முடியாத காய்கறிகளில் ஒன்று கோவக்காய். 

கோவக்காய்

கோவக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களுடன், வைட்டமின் சியும் உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். இதில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த காய்கறி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

கோவைக்காயை நம் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வதனால், உடலில் ஏற்படும் நோய்களான சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், முடி உதிர்வு, பொடுகு, பல் சார்ந்த பிரச்சனை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், கெட்ட கழிவுகள் ஆகிய அனைத்தையும் குணப்படுத்த முடியும். ஆனால் அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயாளிகள் ஸ்வீட் கார்ன் சாப்பிடலாமா?
Scarlet gourds

கோவக்காயை அரைத்து குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்:

  • சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல் நோய்களுக்கு தினமும் மூன்று வேளை இந்த கோவக்காயை அரைத்து குடித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதை குடிப்பதற்கு முன்பு வயிற்றை நன்றாக சுத்தமாக வைத்திருந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

  • சிறுநீரகத்தில் கல் இருந்தால் இதற்கு கோவைக்காயுடன் கத்திரிக்காய் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் கல் முழுமையாக நீங்கி விடும்.

  • கோவக்காய் ஜூஸ் குடிப்பதனால் பல் வலி, ஈறுகளில் வலி மற்றும் வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மஞ்சள் கரை போன்றவை குணமாகும்.

  • தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்வு இவைகளுக்கு கோவக்காய் ஜூஸ் குடிப்பதோடு அரைத்த அந்த சக்கையை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து தலையில் தடவி வந்தால் பொடுகு தொல்லை குறைந்து விடும்.

  • சிலருக்கு சரியான உடல் எடை இருந்தாலும் தொப்பை குறையாது. இதை சரி செய்ய தினமும் இந்த கோவக்காய் ஜூஸ் குடித்து வர தொப்பை குறைந்து விடும்.

  • சர்க்கரை நோயால் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் போக்கு ஏற்படும். இதை கட்டுப்படுத்த தினமும் கோவக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீர் போக்கு அதிகளவில் ஏற்படுவது குறையும் மற்றும் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.

  • மேலும், உடலில் சேரும் கெட்ட கழிவுகளை நீக்கி உடலை ஆரோக்கியத்துடன் வைக்க உதவியாக கோவக்காய் இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com