அழகோடு ஆரோக்கியம் காக்கும் செம்பரத்தம் பூ!

செம்பரத்தம் பூ
செம்பரத்தம் பூ

த்த சோகை - ரத்தமின்மை போன்ற பாதிப்புகள் பெண்களுக்கு ஏற்படுவது நமக்கெல்லாம் தெரிந்ததே. உதிரப்போக்கு  பெண்களுக்கு ஏற்பட்டு  உடல் சோர்வையும், உடல் உபாதைகளையும் ஏற்படுத்தி வாழ்வில் பெரிய தொய்வையே கொடுத்து விடுகிறது. ரத்த விருத்திக்கு என அது இது என்று செலவு பண்ண வேண்டாம். விலை உயர்ந்த பழங்கள், காய்கறிகளும் வேண்டாம். ஒன்று மட்டும் போதும். அதைச் சொல்கிறேன். நீங்கள் அதைச் செய்தால் போதும். ப்ளட் கவுன்ட் என்பது மாயம் மந்திரம்போல் அதிகரிக்கும். பக்க விளைவும் இருக்காது. அதன் செலவும் அதிகம் இருக்காது.

வேறொன்றுமில்லை, ஐந்து இதழ்கள் கொண்ட செம்பரத்தம் பூதான் இது. (செம்பருத்தி என்றும் சொல்வது உண்டு) முந்தைய காலங்களில் இந்தச் செம்பரத்தம் பூவை வைத்து சித்தர்கள் தங்கம் பண்ணுவார்களாம். செம்பரத்தம்’ பூ என்பதிலேயே ரத்தம் சம்பந்தப்பட்டு இருப்பது புரியும். இன்று தங்கச் சத்து நிறைந்த இந்தப் பூ கேட்பாரற்றுக் கிடப்பது வேதனை.

தினமும் பத்துப் பூக்களை எடுத்து ஒரு தம்ளர் வெந்நீரில் போடுங்கள். ஒரு நிமிடத்தில் ரத்தச் சிவப்பாகிவிடும். வெளுத்துப்போன பூவை காய்கறிக் கழிவுகளோடு போட்டுவிடுங்கள். சிவந்த சாறுடன் சர்க்கரை சிறிது சேர்த்துப் (சேர்க்க முடிந்தவர்கள்) பருகிப் பாருங்கள். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் பருகிப் பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள். எப்போதுமே சர்க்கரைக்குப் பதில் பனங்கற்கண்டு சேர்ப்பது அதி உத்தமமானது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இப்படிப் பருகி வர, அந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்து அகன்று போனதையே பார்த்து இருக்கிறேன். சென்னையைத் தாண்டி, மற்ற ஊர்களில் வீட்டிற்கு ஒரு செம்பரத்தம் செடி பூத்துக் குலுங்குவதைப் பார்த்திருக்கிறேன். கிடைக்காதவர்கள், பூக்காரரிடம் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அந்த 63 நாட்கள்!
செம்பரத்தம் பூ

முக்கியமாக ரத்த சோகை உள்ள பெண்கள், சோர்வாகக் காணப்படும் பெண்கள், அதிகம் ஓடி ஆடி உழைக்கும் பெண்கள், எல்லோரும் பருகி வந்தால் ஆரோக்கியம்தானே! இதைத் தொடர்ந்து அருந்தி வர, தங்கபஸ்பம் சாப்பிட்டவர்கள் போல மேனி பளபளப்புடன் அழகும் கூடும். ஆரோக்கியத்தோடு சேர்த்து இதுவும் ஒரு போனஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com