கோடையில் உட்கொள்ள ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் ஏழு வகை உணவுகள்!

கோடையில் உட்கொள்ள ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் ஏழு வகை உணவுகள்!
https://tamil.krishijagran.com

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடல் ஆரோக்கியம் காக்க நாம் அவசியம் உட்கொள்ள வேண்டி ஏழு உணவுகளை ஆயுர்வேதம் பரிந்துரை செய்துள்ளது. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

* உடலை நீரேற்றத்துடனும் குளிர்ச்சியாகவும் வைக்க உதவும் வெள்ளரிக்காய்.

* மிருதுவான சுவையுடன் சுலபமாக ஜீரணமாகக் கூடியது சுக்கினி (Zucchini). இது உடலை நீரேற்றத்துடனும் குளிர்ச்சியாகவும் வைக்க உதவும்.

* கசப்பான சுவை கொண்டிருந்தபோதும் பாகற்காயை அதன் குளிர்ச்சி தரும் குணத்திற்காகவும், பித்தம், தோஷம் இரண்டையும் சமநிலையில் வைத்துக் கையாளும் திறனுக்காகவும் சம்மரில் உண்ண ஏற்ற உணவாக ஆயுர்வேதம் இதை பரிந்துரை செய்கிறது.

* பசலை, காலே உள்ளிட்ட மேலும் பல பச்சை இலைக் காய்கறிகள் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, அதிகளவு ஊட்டச் சத்துக்களையும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களையும்  தருபவை. மேலும் இவை சுலபமாக செரிமானமாகக் கூடியவை.

* வெந்தயக் கீரை போன்ற கசப்பு சுவை கொண்ட இலைக் காய்கறிகள் கசப்பாக இருந்தபோதும் அற்புதமான குளிர்ச்சி தரும் குணம் கொண்டவை. இதற்காகவே இதை சம்மரில் உண்பதற்கு ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது.

இதையும் படியுங்கள்:
மனதை ரிலாக்ஸ் ஆக்கும் 5 எளிய வழிகள்!
கோடையில் உட்கொள்ள ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் ஏழு வகை உணவுகள்!

* சிலான்ட்ரோ (Cilantro) எனப்படும் கொத்தமல்லித் தழை பன்முகத்தன்மையுடையது. இதன் குளிர்ச்சி தரும் குணத்திற்காக இம்மூலிகை இலைகளை ரசம், துவையல், மல்லி சாதம் போன்ற பலவகை உணவுகளுடன் சேர்த்து சமைத்து உண்பது வழக்கமாய் உள்ளது.

* புதினா இலைகள் குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் தரக்கூடிய தாவரம். இது சம்மரில் தயாரித்து உண்ணப்படும் சாலட்கள், இயற்கைக் குளிர் பானங்கள் மற்றும் சட்னிகளில் சேர்ப்பதற்கு மிகவும் பொருத்தமான மூலிகையாகும். புதினா செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. அதிக சூட்டினால் உடலில் ஏற்படும் கட்டிகள், வியர்குரு போன்ற சிறு சிறு கோளாறுகளை குணப்படுத்தவும் உதவும்.

மேலே கூறிய காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்து உட்கொள்வோம்; உடல் சூடு இன்றி உற்சாகமாய் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com