இரத்த அழுத்தம் சமநிலையில் இருக்க உண்ண வேண்டிய ஏழு வகைப் பழங்கள்!

Seven types of fruits to eat to keep blood pressure balanced
Seven types of fruits to eat to keep blood pressure balancedhttps://www.wallpaperflare.com

ம் உடலின் அனைத்து உறுப்புகளும் வேலை செய்வதற்குத் தேவையான ஊட்டச் சத்துக்களையும் பிராண வாயுவையும் இரத்தக் குழாய்கள் மூலம் இரத்தம் விநியோகம் செய்கிறது. இதயம் இரத்தத்தை பம்ப் செய்யும்போது இரத்தக் குழாய்களின் சுவர்களில் இரத்தச் சுற்றோட்டத்தினால் ஏற்படும் அழுத்தமே இரத்த அழுத்தம் எனப்படுகிறது.

இது சிஸ்ட்டோலிக் (Systolic), டயாஸ்டோலிக் (Diastolic) என இரு வகைப்படும். அதன் நார்மல் அளவு 120/80mm Hg என்ற அளவுகோலில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரத்தக் குழாயில் சுருக்கம் மற்றும் அடைப்பு போன்றவை ஏற்படும்போது இந்த அளவானது உயரும் அபாயம் ஏற்படுகிறது. அதனால் இதய நோய்கள் வரும் வாய்ப்பு கூடுகிறது. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க நாம் உண்ண வேண்டிய ஏழு வகைப் பழங்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

* வாழைப்பழங்களிலுள்ள பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது.

* கிவி (Kiwi) பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் K உள்ளிட்ட பல வகை ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதுவும் இரத்த அழுத்தத்தை சமப்படுத்த உதவுகிறது.

* கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் கொண்டது ஆப்பிள். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும் உதவி புரிகிறது.

* பெரி வகைப் பழங்கள் அதிகளவு வைட்டமின்களும் ஆன்டி ஆக்சிடன்ட்களும் நிறைந்தவை. இவை இயற்கை முறையில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சமநிலைப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை.

இதையும் படியுங்கள்:
தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் என்ன தெரியுமா?
Seven types of fruits to eat to keep blood pressure balanced

* இரத்த அழுத்தத்தை நார்மலில் வைக்க, இயற்கை முறையில் பல கூட்டுப்பொருள்களைத் தன்னுள் கொண்டுள்ளது கிரேப்ஸ்.

* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கத் தேவையான பல ஆன்டி ஆக்சிடன்ட்கள் மாதுளம் பழத்தில் நிறைவாய் உள்ளன.

* ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு உதவக்கூடிய பல வைட்டமின்கள் ஆரஞ்சுப் பழத்தில் நிறைந்துள்ளன.

மேற்கூறிய பழ வகைகளை தினசரி உணவுகளுடன் சேர்த்து உட்கொண்டு ஆரோக்கியம் நிறைந்த வாழ்வு பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com