உங்களுக்கு நூடுல்ஸ் சாப்பிடுவது ரொம்ப பிடிக்குமா? போச்சு! 

Noodles
Side Effects of Eating Noodles

நூடுல்ஸ் போன்ற சுவையான விரைவாக செய்யக்கூடிய உணவை யார் தான் விரும்பி சாப்பிட மாட்டார்கள்?. என்றாவது அசதியாக இருக்கும்போது உடனடியாக செய்து சாப்பிடுவதற்கு நூடுல்ஸ் சரியான தேர்வாகும். இருப்பினும் இந்த உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சில பக்க விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். அதுசார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். நூடுல்ஸ் பார்ப்பதற்கு நமக்கு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாதது எனத் தோன்றினாலும், அவற்றின் இருண்ட பக்கங்களையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 

நூடுல்ஸ் என்பது சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவில் தயாரிக்கப்படுகிறது. அதில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லை. எனவே தினசரி நூடுல்சை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தேவையானத் முக்கிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதித்து பல்வேறு உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தலாம். 

பல நூடுல்ஸ் பிராண்டுகளில் அதிக அளவு சோடியம் பயன்படுத்தப்படுகிறது. அது உங்களது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான சோடியம் உட்கொள்வதால் உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்சனைகள் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

உடனடியாக தயாரிக்க கூடிய நூடுல்களில் பெரும்பாலும் செயற்கை சுவைகள், மோனோ சோடியம் குலுட்டமைட், நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்கும் ரசாயனங்கள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இவை சில நபர்களுக்கு ஒவ்வாமை, செரிமானப் பிரச்சனைகள் மற்றும் தலைவலியை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் நூடுல்ஸ் வாங்குவதற்கு முன் அதில் எதுபோன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைப் படித்து தேர்ந்தெடுப்பது நல்லது. 

நூடுல்ஸ் அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். நூடுல்ஸில் உள்ள அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரித்து, உங்களது உடல் எடையை மோசமாக அதிகரிக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் நூடுல்ஸ் உணவை தவிர்ப்பது நல்லது. 

நூடுல்ஸில் நார்ச்சத்து என்பது துளி கூட இல்லை. இதனால் மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். மற்ற உணவுகள் சாப்பிடாமல், அதிகமான அளவில் நூடுல்ஸ் உட்கொள்வது உங்களது குடல் இயக்கத்தை சீர்குலைத்து, செரிமான அமைப்பில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். 

இதையும் படியுங்கள்:
டைனோசர்களுக்கு முன்னர் இந்த உலகம் எப்படி இருந்தது தெரியுமா? 
Noodles

நூடுல்ஸ் தயாரிக்கும் போதும், சமைக்கும் போதும், அவற்றை பதப்படுத்தும் போதும் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது பாக்டீரியா தொற்று, உணவு மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே நூடில்ஸில் உள்ள மாசுபாட்டின் அபாயத்தைக் குறைக்க அவற்றை முறையாக சமைக்க வேண்டியது அவசியம். 

இப்படி, தொடர்ச்சியாக நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் ஒரு நூடுல்ஸ் விரும்பி என்றால், அதன் பாதகமான விளைவுகளைப் புரிந்துகொண்டு இன்றே அதை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துங்கள். மாதம் ஒரு முறை, இரு முறை என்றால் பரவாயில்லை. இதுவே வாரத்தில் இருமுறை என்றால், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com