பெண்களுக்கு மனச்சோர்வு இருப்பதற்கான அறிகுறிகள்!

Depression Girl
Depression Girl
Published on

ஆண்களைவிட பெண்களுக்கே Depression, Mood Swing ஆகியவை அதிகம் ஏற்படும். சிலர் மனம் சோர்வாக இருப்பதையே அறியாமல் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள். அந்தவகையில், பெண்கள் மனச்சோர்வில் இருப்பதைக் காட்டிக்கொடுக்கும் அறிகுறிகளைப் பார்ப்போம்.

பொதுவாக ஆண்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டால், அதை உடனே வேறு வழிகளிலோ அல்லது வேறு யாரிடமோ தங்களது உணர்வுகளை எளிதாக வெளிகாட்டி, மனச்சோர்விலிருந்து சீக்கிரம் வெளிவந்துவிடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படியில்லை. அவர்கள் எந்த விதத்தில் காண்பிப்பது என்று அறியாமல், தடுமாறுவார்கள். சிலர் காரணமில்லாமல் மற்றவர்களிடம் எரிந்து விழுவார்கள். ஆனால், சிலர் தங்களுக்குள்ளேயே வைத்து அவதிப்படுவார்கள். வெளியே சொல்லாமல், தங்களுக்குள்ளேயே வைப்பது தற்கொலையையே தூண்டிவிடும் அளவு கொடியதாகிவிடும்.

பெண்களுக்கு மனச்சோர்வு நீண்ட காலம் இருக்கும். அதேபோல் மனச்சோர்விலிருந்து சரியான உடனே திரும்பி வரும். பெண்கள், பிரசவ காலத்திற்கு பிறகு சில நாட்கள், இந்த மனச்சோர்வால் பாதிக்கப்படுவார்கள். மாதவிடாய் காலங்களிலும் இந்த மனச்சோர்வு ஏற்படும். இந்த இரண்டு நிலைகளிலும் மிக மோசமான மனநிலை மாற்றங்கள் ஏற்படும்.

அந்தவகையில் அறிகுறிகள் பற்றிப் பார்ப்போம்:

1.  இரவு நேரத்தில் பெண்களுக்கு தூக்கமே இருக்காது. அப்படி சிறிது நேரம் தூங்கினாலும், சட்டென்று முழிப்புத் தட்டிவிடும். இரவு நேரத்தில் எழுந்து வெகு நேரம் உட்கார்ந்துவிடுவார்கள். காலை நேரத்திலும் சீக்கிரம் எழுந்துவிடுவார்கள்.

2.  மனச்சோர்வில் இருக்கும்போது உடம்பிலும் சில மாற்றங்கள் இருக்கும். அதாவது, உடம்பு வலி ஏற்படும். குறிப்பாக, தலைவலி, பிடிப்புகள், மார்பக வலி அல்லது வீக்கம் ஆகியவை ஏற்படும். அதுவும் நம்மால் தாங்கவே முடியாத அளவிற்கு வலி இருக்கும்.

3.  மனச்சோர்வு நேரத்தில், காரணமில்லாமல் பெண்களுக்கு கோபம் ஏற்படும். பெண்கள் மிகவும் பொறுமைசாலிகள். மனச்சோர்வு ஏற்படும் நேரத்தில், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்கள். அப்போது திடீரென்று நாம் எதாவது சாதாரண விஷயம் கூறினாலே, தேவையில்லாமல் கோபம் வரும். கோபத்தில் கத்தி சண்டையிடுவார்கள். ஆகையால், அந்த நேரத்தில் அவர்கள் அமைதியாக இருந்தால், சிறிது நேரம் நீங்களும் அமைதியாக இருப்பதே நல்லது.

4.  மனம் அமைதியற்று இருக்கும். படபடப்பாக இருக்கும். காரணமில்லாமல் பரபரப்பாகவே இருப்பார்கள்.

5.  மிகவும் பிடித்த விஷயங்கள், வாழ்க்கை முழுவதும் அந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்றளவிற்கு பிடித்தமான விஷயத்தைக்கூட, மனச்சோர்வு நேரத்தில் வெறுப்பார்கள். அது ஒரு செயலாயினும் சரி, நபராயினும் சரி.

6.  எப்போதும் 'நம்மால் முடியாத விஷயம் யாராலும் முடியாது' என்று சொல்லும் பெண்கள், மனச்சோர்வு நேரத்தில், கடுகளவு நம்பிக்கைக்கூட இல்லாமல் இருப்பார்கள். எதுவும் செய்ய தெரியாது, வராது, நாம் சிறந்தவர் அல்ல, நமக்கு உதவிக்கு யாருமே இல்லை போன்ற எண்ணங்கள் அவர்களை மேலும் மனச்சோர்வுக்கு அழைத்துச் செல்லும்.

இதுவே மனச்சோர்வில் இருப்பதற்கான அறிகுறிகள்.

இதையும் படியுங்கள்:
ரத்த சர்க்கரையைக் குறைக்கும் இன்சுலின் இலை பற்றி தெரியுமா? 
Depression Girl

இந்த மனச்சோர்விலிருந்து விடுபட வேண்டுமென்றால், ஒரு ட்ரிப் செல்லுங்கள். அன்றாட வாழ்க்கைக்கு ஒரு இடைவெளி கொடுங்கள். சும்மா இருப்பதைத் தவிர்த்து, உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களை செய்யுங்கள். உங்களை மாற்றும் புத்தகங்கள், படங்கள் பாடல்கள் ஆகியவற்றை படியுங்கள், பாருங்கள், கேளுங்கள். அதேபோல், அன்றாட உடுத்தும் உடைகளைத் தூக்கிப்போட்டு, தன்னம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் ஆடைகளை அணியுங்கள்.

நீங்கள் நினைத்தால், எளிதில் இதிலிருந்து விடுபடலாம்.   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com