
நம் உடலில் யூரிக் அமிலம் சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படுகிறது. அப்படி வெளியேறாமால் அது அதிகமானால் அதை hyperuricemia என்று கூறுவார்கள். அதிக யூரிக் அமிலத்தால் விரல்கள் மற்றும் கைகளில் வலி ஏற்படக்கூடும். சில சமயம் மரத்துப் போகலாம், வீக்கமும் ஏற்படலாம். இந்த பிரச்னைகள் எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
அதிக யூரிக் அமிலத்தால் கூர்மையான கத்தி போன்ற மோனோ சோடியம் crystals உருவாவதால், அழற்சி அதிகமாகி gout என்ற பிரச்னை ஏற்படுகிறது. இது கை மணிக்கட்டு விரல்களில் வலி ஏற்பட்டு கால்களில் மட்டுமல்லாது கைகளையும் பாதிக்கிறது.
யூரிக் அமிலம் அதிகம் உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்
கைகளில் இரவு நேரத்தில் வலி ஏற்படும். விடியற்காலையிலும் இது வரலாம். அழற்சி அதிகமாகி இப்படி வலி அதிகமாகும். வலியோடு எரிச்சல் உணர்வையும் அனுபவிப்பக்கூடும். வலியால் மூட்டுகள் பாதிக்கப்பட்டு வீக்கமும், சிவத்தலையும் ஏற்படுத்தும். மூட்டுக்களில் மேல் உள்ள தோல் மிகவும் இறுக்கமாக காணப்படும்.
மூட்டுக்களில் பாதிப்பால் கை இறுக்கமாகி மடக்க முடியாமல் நீண்ட முடியாமல் துன்பம் தரும். இதனால் உங்கள் விரல்களால் எந்த பொருளையும் பிடிக்க முடியாமலும், எந்த வேலையையம் செய்ய முடியாமலும் போகும். எழுத கூட முடியாமல் போகும் மூட்டுக்கள் மென்மையாகி விடுவதால் சிறிய அழுத்தம் கூட வலியைத் தரும். சிலருக்கு சட்டை பட்டன் போட்டுக் கொள்ள முடியாது. சிலருக்கு பாத்திரங்களை பிடிக்க முடியாது.
இதற்கான காரணங்கள்... ஃப்யூரியஸ் அதிகம் உள்ள மாமிசம் மற்றும் மது, யூரிக் அமிலத்தை அதிகரிக்கும். நீரிழிவு, ஹைபர் டென்ஷன் மற்றும் obesity போன்றவற்றால் யூரிக் அமிலம் அதிகமாகும். சில மருந்துகள் யூரிக் அமிலத்தை அதிகரிக்கச் செய்யும்.
எப்படித் தடுப்பது
சமச்சீரான உணவு அதாவது பழங்கள், முழுதான்யங்கள், புரதச் சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும். சர்க்கரை பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும். நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். உங்கள் எடை அளவாக இருக்க உடற்பயிற்சி மேற்க்கொள்ள வேண்டும். உங்கள் விரல்களில் மற்றும் கைகளில் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)