‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என வாழ்ந்தவர்கள் நமது முன்னோர்கள். ஆரோக்கியமான உணவை உண்டு நோய்நொடி இன்றி அவர்கள் இதனாலேயே ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு மருத்துவர்களை அணுகாமல், உணவின் மூலமே தங்கள் உடல் பிரச்னைகளை சரி செய்தார்கள். அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளுக்கு நமது முன்னோர்கள் பயன்படுத்தி நிவாரணம் கண்ட சில உணவு வகைகளை இந்தப் பதிவில் காண்போம்.
காய்ச்சல் உடம்புக்கு மருந்து - கஞ்சி, நொய் கஞ்சி.
பிரசவித்த பெண்ணிற்கு - செலவு ரசம், மருந்து குழம்பு, பூண்டு குழம்பு, பொரிச்ச கூட்டு.
பூப்படைந்த பெண்ணுக்கு - உளுத்தங்களி, எள்ளு துவையல்.
வயிற்றுக் கோளாறுகளுக்கு - இஞ்சி குழம்பு, சுண்டை வத்தல் புளிக்குழம்பு, ஓம மோர் குழம்பு, சுண்ட காய்ச்சிய மோர், நார்த்தங்காய் பச்சடி, நார்த்தங்காய் உப்பு கண்டம்.
வாய்வு பிரச்னைக்கு - பிரண்டைக் குழம்பு, பிரண்டை ரசம், சுக்கு பொடி, சீரகத் தண்ணீர்.
மாதவிலக்கு பிரச்னைக்கு - வாழைப்பூ கூட்டு, வெந்தயக் களி, முள் முருங்கை கீரை.
சளி, கபம் தொல்லைக்கு - தூதுவளை கீரைக் குழம்பு, மிளகு ரசம், கண்டங்கத்திரி தூதுவளை ரசம்.
உடம்பு வலிக்கு - மிளகு ரசம், சுட்ட அப்பளம், மிளகு குழம்பு.
பித்தம் தணிக்க - மல்லித் துவையல், கருவேப்பிலை துவையல், இஞ்சி துவையல், புதினா துவையல்.
வயிற்றுப்புண், வாய்ப்புண்ணிற்கு - மணத்தக்காளி கீரை மசியல், அத்திக்காய் கூட்டு, பயத்தங்கஞ்சி.
சிறுநீர் பிரச்னைக்கு - சுரைக்காய் கூட்டு, பார்லி கஞ்சி, முள்ளங்கி துவையல்.
உடல் பலத்திற்கு - கேழ்வரகு களி, பருப்பு சாதம், சோளக்களி, நேந்திரம் பழம்.
வாதத்திற்கு - வாதநாராயணன் கீரை.
மூட்டு வலிக்கு - முடக்கத்தான் கீரை.
உடல் சூடு தணிய - பழஞ்சோறு சின்ன வெங்காயம், நீராகாரம்.
அஜீரணம், பசியின்மை - அங்காயப்பொடி, பத்தியக் குழம்பு, பிரண்டை துவையல்.