உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

Health benefits of tomatoes
Health benefits of tomatoes
Published on

வ்வொரு வீட்டிலும் நிச்சயம் இருக்கும் தினசரி அத்தியாவசிப் பொருள் தக்காளி பழம். இது இல்லாத வீடே இல்லை என்று கூடச் சொல்லலாம். அதேபோல், தக்காளி பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை என்றும் கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த பழம் காய்கறிகளில் ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது.

உடலுக்குத் தேவையான வைட்டமின் A, வைட்டமின் K, வைட்டமின் பி6, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியத் தேவையான மிகவும் முக்கியமான சத்துக்கள் அதிக அளவில் இந்தப் பழத்தில் உள்ளது. நாம் அன்றாடம் உணவில் ஏதாவது ஒரு வகையில் தக்காளியை சேர்த்து சாப்பிட்டு வருகிறோம். சாம்பார் முதல் சட்னி, ரசம் வரை, அசைவ மற்றும் சைவ உணவுகளில் முக்கியப் பங்கு வகிப்பது தக்காளி. இதில் உள்ள முக்கியமான சத்துக்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

வைட்டமின் ஏ: தக்காளியில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. வைட்டமின் ஏ கண் ஆரோக்கியம், செல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியமானது ஆகும். ஒரு நடுத்தர தக்காளியில் DV இன் 12 சதவிகித வைட்டமின் ஏ உள்ளது.

வைட்டமின் கே: தக்காளி வைட்டமின் கே யின் நல்ல ஆதாரமாகும். இது இரத்த உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஒரு நடுத்தர தக்காளியில் DV இன் 8 சதவிகித வைட்டமின் கே உள்ளது.

இதையும் படியுங்கள்:
நுண்கலை போற்றிய நல்லவர்!
Health benefits of tomatoes

வைட்டமின் பி6: தக்காளியில் வைட்டமின் பி6 உள்ளது, இது மூளை செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஹார்மோன் வளர்சிதை மாற்றத்திற்கு முக்கியமானது. ஒரு நடுத்தர தக்காளியில் DV இன் 4 சதவிகித வைட்டமின் பி6 உள்ளது.

பொட்டாசியம்: தக்காளி பொட்டாசியத்தின் நல்ல ஆதாரமாகும். இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுவதோடு, தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு முக்கியமானது. ஒரு நடுத்தர தக்காளியில் DV இன் 6 சதவிகித பொட்டாசியம் உள்ளது.

இனி, உங்கள் வீட்டு மூன்று வேளை சமையலில் ஏதாவது ஒரு வேளையிலாவது தக்காளியை கொண்டு சமையுங்கள். உடலுக்குத் தேவையான வைட்டமின்களைப் பெற்று உடல் ஆரோக்கியமாக வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com