எதிர்பாராத உடல் பிரச்னைகளுக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்!

உடல் உபாதையோடு பெண்
உடல் உபாதையோடு பெண்
Published on

ன்றாட வாழ்வில் நம்மை அறியாமல் சில எதிர்பாராத உடல் நலப் பிரச்னைகள் நமக்கு ஏற்படலாம். அப்படி ஏற்படும் சில உடல் பிரச்னைகள் குறித்தும் அவற்றுக்கான எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகளையும் இந்தப் பதிவில் காணலாம்.

தலைவலி: தைராய்டு, பார்வைக் குறைபாடு, தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், தலைச்சுற்றல் இப்படி தலைவலி வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இதற்கு புதினா இலையைக் கசக்கி சாறு பிழிந்து நெற்றிப் பொட்டில் தடவினால் தலைவலி குறையும். ஐந்தாறு துளசி இலைகளுடன் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தண்ணீரைக் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 2 சிட்டிகை நெல்லிப்பொடி போட்டு ஆவி பிடித்தால் நீர்கோர்த்தலால் உண்டான தலைவலி மறையும்.

இருமல்: மழையில் நனைந்தாலோ, குளிர்ந்த பானங்களை அருந்துவதாலோ அல்லது தலைமுடியை ஈரமாகக் கட்டுவதாலோ சளி பிடித்தால் இருமலும் அதனுடன் தொற்றிக் கொள்கிறது. பொதுவாக, வைட்டமின் 'சி' அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக்கொண்டால் சளி, இருமல், தொந்தரவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். நான்கு சின்ன வெங்காயத்தை தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் பாதி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் சளித் தொல்லையிலிருந்து குணம் கிடைக்கும். ஒரு கப் வெந்நீரில் 2 சிட்டிகை மிளகுத்தூள், 2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்தால் சீறிக் கொண்டு வரும் இருமல் அமைதியாக அடங்கும்.

தொண்டை வலி: வெந்நீரில் கல் உப்பைப் போட்டு அந்த நீர் தொண்டை பகுதியில் படும்படி வாய் கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு கட்டுப்படும். வெந்நீரில் துளசி இலையைப் போட்டு அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் தொண்டை வலி ஏற்படாமல் தடுக்கலாம். சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட. தொண்டை கரகரப்பு குணமாகும்.

இதையும் படியுங்கள்:
‘அசால்ட்’ என்பதன் அர்த்தம் தெரியுமா?
உடல் உபாதையோடு பெண்

விக்கல்: தொண்டை உலர்வதால் விக்கல் ஏற்பட்டால் ஒரு கப் தண்ணீர் குடித்தால் விக்கல் நின்று விடும். ஒரு பனங்கற்கண்டு வாயில் போட்டு கொண்டாலும், அது கரைந்து தொண்டையை ஈரமாக்கி விக்கலை நிறுத்தும். சிலருக்கு தொடர் விக்கல் ஏற்படும். அவர்கள் நெல்லிச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அஜீரணம்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செரிமான பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். பசியின்மை, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாந்தி, வயிற்றில் இரைச்சல், மலச்சிக்கல், உமிழ்நீர் அதிகமாக சுரத்தல் ஆகியவை அஜீரணத்தின் அறிகுறிகள் ஆகும். காரம், புளிப்பு, மசாலாக்கள் நிறைந்த உணவுகள், எண்ணெய் பண்டங்கள், அசைவ உணவுகள், கண்ட  நேரத்தில் சாப்பிடுவது இவையெல்லாம் அஜீரணத்துக்குக் காரணமாக அமைகின்றன. பழங்கள், மோர் இளநீர், நார்சத்து நிறைந்த காய்கறிகள் அதிகமாக எடுத்துக்கொள்வது செரிமான பிரச்னையை சீராக்க உதவும். அடிக்கடி அஜீரணம் ஏற்பட்டால் உணவு சாப்பிட்டதும் ஒரு ஸ்பூன் வெற்றிலை சாறு குடித்தால் அஜீரணம் ஏற்படாது.

வாய் துர்நாற்றம்: ஈறுகளில் ஏற்படும் பிரச்னையே வாய் துர்நாற்றத்திற்கு முக்கியக் காரணமாகும். இவர்கள் அதிகக் காரம், அதிக புளிப்பு உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். வாயில் கிராம்பு போட்டுக்கொண்டால் துர்நாற்றம் மாறும். காலையில் எழுந்ததும் 4 கப் தண்ணீர் குடித்தால் வயிற்று புண்ணால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம். காலையும், இரவு படுக்கச் செல்லும் முன்பும்  நன்றாக பற்களை சுத்தப்படுத்த வேண்டும். புதினா, மல்லி இலைகளை வாயில் போட்டு மென்றால் துர்நாற்றத்தைப் போக்க முடியும்.

சிறு சிறு நோய்கள் வந்த ஆரம்பத்திலேயே வீட்டு மருந்துகளைப் பயன்படுத்தி நிவாரணம் முயற்சி செய்வோம். முடியாத பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com