டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்!

Dengue Fever
Dengue Fever

மிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் நாமும் நம் உடல் நலனைக் காக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லவா? டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க சில எளிய வீட்டு வைத்தியங்களைக் காண்போம்.

1. பப்பாளி இலை

பப்பாளி இலை
பப்பாளி இலை

ப்பாளி இலையில் பப்பையின் மற்றும் சைமபப்பைன் போன்ற நொதிகள் உள்ளன. இந்த நொதிகள் வயிறு வீக்கம், செரிமானம் மற்றும் செரிமானக் கோளாறுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. 30 மி.லி. பசுமையான பப்பாளி இலை ஜூஸை எடுத்துக்கொள்வது இரத்த பிளேட்டுகளை அதிகரிக்க உதவுகிறது.

2. மாதுளை

மாதுளை
மாதுளை

ண்டைய காலத்திலிருந்தே மாதுளை ஆரோக்கியத்திற்காகவும் மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாதுளை முதன்மையான சத்துக்களையும், கனிமங்களையும் கொண்டுள்ளது. எனவே. மாதுளை டெங்கு காய்ச்சலால் ஏற்படுகின்ற உடல் அசதிகளுக்கெதிராக போராடும் ஆற்றலைத் தருகிறது. இதிலிருக்கிற இரும்புச் சத்து புதிய இரத்தம் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும், தேவையான இரத்தத் தட்டுகளை தக்க வைத்திருக்க உதவுவதால் டெங்குவில் இருந்து விடுபடுவதற்கான முக்கியமான காரணியாக மாதுளை இருக்கிறது.

3. இளநீர்

இளநீர்
இளநீர்Shobana Vigneshwar

பொதுவாக, டெங்கு உடலில் உள்ள நீர்ச்சத்தை இழக்கச் செய்கிறது. அப்படி ஏற்படுகிற சூழலில் உடனடியாக இளநீரை அருந்தும்போது நீர்ச்சத்துக் குறைபாடு சமன் செய்யப்படுகிறது. மேலும், இது எலெக்ட்ரோரைட்டுகளையும் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துகளையும் அளிக்கிறது.

4. மஞ்சள்

மஞ்சள்
மஞ்சள்

ஞ்சள் கிருமி நாசினியாகவும், வளர்சிதை மாற்ற ஊக்கியாகவும் செயல்படுவதால் டெங்குவில் இருந்து விடுபடுவதற்கு பேருதவி செய்கிறது. மேலும், மஞ்சளை பாலுடன் கலந்து குடிக்கும்போது கூடுதல் பலன்களை அளிக்கும். ஏனெனில், பாலிலுள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலு அளிக்கும்.

5. வெந்தயம்

வெந்தயம்
வெந்தயம்

வெந்தயம் மயக்க மருந்தைப் போல் செயல்பட்டு தூக்கத்தை ஊக்குவிப்பதால் வலிகளிலிருந்து தற்காலிக ஓய்வைப் பெறுவதற்கு உதவுகிறது. அது மட்டுமில்லாமல் அதிகக் காய்ச்சலை சமநிலைப்படுத்துவதற்கு வெந்தயம் பயன்படுவதால் டெங்கு போன்ற காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் ஏற்றது.

6. ஆரஞ்சு

ஆரஞ்சு
ஆரஞ்சு

ரஞ்சு பழங்களில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடுவதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

7. புரோக்கோலி

புரோக்கோலி
புரோக்கோலிMizina

ரத்த பிளேட்டுகளை மறு உருவாக்கம் செய்யும் வைட்டமின் கே புரோக்கோலியில் நிறைந்துள்ளது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த பிளேட்டுகளின் எண்ணிக்கை குறையும்போது புரோக்கோலியை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், இதில் ஆண்டி ஆக்சிடன்கள் மற்றும் கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
உறவுகளை மேம்படுத்த என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?
Dengue Fever

8. கீரை

கீரை
கீரை

கீரைகளில் இரும்புச் சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்தச் சத்துகள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை உயர்த்துகிறது. மேலும் இதில் இரும்புச்சத்து உள்ளதால் இரத்த தட்டுகளை உயர்த்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

9. கிவி பழங்கள்

கிவி பழங்கள்
கிவி பழங்கள்

கிவி பழங்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் இ மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகளின் கூட்டுக் கலவையாக இருக்கிறது. இந்தச் சத்துகள் உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. கிவி பழத்திலுள்ள காப்பர் இரத்த சிவப்பணுக்களை உருவாக்கி டெங்கு காய்ச்சலுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com