உடலின் பித்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் இயற்கையான எளிய மருத்துவங்கள்!

பித்த வாந்தி
பித்த வாந்திhttps://tamil.timesnownews.com
Published on

பித்தம் அதிகமானால் வாய் அதிகமாகக் கசக்கும். அடிக்கடி குமட்டல் வரும். அதேபோல், விரல் நகங்கள் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மருதாணி போட்டால் கைகள் அதிகக் கருப்பாக மாறிவிடும். இவற்றை இயற்கையான எளிய கை மருத்துவங்களால் குணப்படுத்தி விடலாம் . அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* கடுக்காய் பொடியுடன் பாதியெடை உலர்ந்த திராட்சை சேர்த்து அரைத்து ஒரு கிராம் அளவாகக் காலையில் சாப்பிட்டு வர, பித்த வாந்தி, வாய் கசப்பு ஆகியவை தீரும்.

* தாழை ஓலைகளில் பாய் முடைந்து அதில் படுத்து உறங்கி வந்தால் பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்றல், பித்த வாந்தி, பித்த மிகுதி ஆகியவை குணமாகும்.

* துளசி சாற்றுடன் கல்கண்டு கலந்து சாப்பிட்டு வர பித்த வாந்தி சரியாகும்.

* கொய்யா இலையை நசித்து கசாயம் செய்து பருக, பித்த வாந்தி சரியாகும்.

* வேப்பம் பூவை பொடி செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட, ரசம் வைத்து மதிய உணவுடன் சாப்பிட்டு வர பித்தம் குறையும். பித்த வாந்தியும் நின்று போகும்.

* விளாம்பழம் கிடைக்கும் பருவத்தில் தினம் ஒன்றாக ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் நன்றாகக் குறையும்.

* பாகல் இலைச் சாறு ஒரு சிறிய டம்ளர் அளவு மூன்று நாட்கள் பருகி வர பித்தம் குறையும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து மோரை உணவில் பயன்படுத்த பித்தச்சூடு தணியும்.

* 15 கிராம் நெல்லிக்காயை இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 100 மில்லியாக காய்ச்சி அதனுடன் 20 மில்லி தேன் கலந்து மூன்று வேளையாக நான்கு நாட்கள் சாப்பிட, மிகு பித்தம் தணியும்.

* வெள்வேல் வேர்ப் பட்டை, அருகம் வேர் இரண்டையும் சம அளவு இடித்து இரண்டு லிட்டர் நீரில் இட்டு அரை லிட்டராக வரும் வரை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் அரை லிட்டர் நல்லெண்ணெய் கலந்து நன்றாகப் பதமுறக் காய்ச்சி அதை வடித்து வைத்துக் கொண்டு வாரம் இரண்டு முறை தலை முழுகி வர பித்த மயக்கம் தீரும்.

* வேப்பம்பூ அரை கைப்பிடி எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி அந்தக் கசாயத்தை நாளொன்றுக்கு ஒரு முறை பருகி வர பித்தம் குறையும்.

இதையும் படியுங்கள்:
குறைகளைக் கொண்டாடக் கற்றுத்தரும் ஜப்பானிய ‘கின்ட்சுகி டெக்னிக்’ பற்றி தெரியுமா?
பித்த வாந்தி

* 5 கிராம் மருத இலையை அரைத்து 100 மில்லி பாலில் கலந்து காலை, மாலை மூன்று நாள் அருந்தி வர பித்த வெடிப்பு தீரும்.

* ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயில் பட்டாணி அளவு சுண்ணாம்பை கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் பித்த வெடிப்பு மீது பூச பித்த வெடிப்பு குணமாகும்.

* ஆல, அரச மரத்துப் பாலை பித்த வெடிப்பில் காலை, மாலை மூன்று நாட்கள் பூசி வர பித்த வெடிப்பு மறையும்.

அருகில் இருக்கும் சித்த மருத்துவருடன் ஆலோசித்து இதுபோன்ற மருந்துகளை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் காக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com