முடி உதிர்வைத் தடுத்து செழிப்பாக வளரச் செய்யும் எளிய ஆலோசனைகள்!

Hair Growth
Hair Growthhttps://tamil.boldsky.com

ரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் விதவிதமான ஹேர் ஆயில், ஹேர் மாஸ்க் என தேடித் தேடி வாங்கி உபயோகித்து வருகின்றனர். நம் சமையல் அறையில் உள்ள பொருட்களைக் கொண்டே கூந்தலை நீளமாக, அடர்த்தியாக, ஆரோக்கியமாக வளரச் செய்ய முடியுமென்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பிரச்னையின்றி முடி வளர எந்தப் பொருளை எவ்வாறு உபயோகிக்க வேண்டுமென்பதை இங்கே பார்க்கலாம்.

ஒரு கப் அரிசியை மூன்று கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை வடிகட்டிப் பிரித்தெடுத்து அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு அதை ஆற விட்டு, அந்த அரிசித் தண்ணீரை உச்சந் தலையிலும் முடி முழுவதும் சேர்க்கவும். இது முடி வளர்ச்சிக்கு நன்கு உதவும்.

தேவையான அளவு வெந்தயத்தைப் பவுடராக்கி, ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் ஆக்கவும். அந்த பேஸ்ட்டை உச்சந் தலையிலும் முடி முழுவதும் அப்ளை பண்ணி முப்பது நிமிடங்கள் வைத்திருக்கவும். பின் மிருதுவான ஷாம்பு உபயோகித்து கழுவி விடவும்.

ஒரு வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியிலிட்டு அரைத்து, வடிகட்டி அதன் ஜூஸை ஒரு பௌலில் ஊற்றவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கலக்கவும். பின் அதை உங்கள் முடியில் அப்ளை பண்ணி இருபது நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு மிருதுவான ஷாம்பு உபயோகித்து இரண்டு முறை முடியைக் கழுவி விடவும்.

இதையும் படியுங்கள்:
கோயில்களில் தெப்ப உத்ஸவம் எதற்காக தெரியுமா?
Hair Growth

இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலக்கவும். பின் அந்தக் கலவையை உச்சந் தலையிலும் முடி முழுவதும் அப்ளை பண்ணி முப்பது நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு மிருதுவான ஷாம்பு உபயோகித்து இரண்டு முறை முடியைக் கழுவி விடவும்.

ஒரு கப் சீயக்காய் பவுடருடன் மூன்று டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட்டாக்கவும். பின் அதை உச்சந்தலையிலும் முடி முழுவதும் அப்ளை பண்ணி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு மிருதுவான ஷாம்பு உபயோகித்து முடியைக் கழுவி விடவும்.

வீட்டிலுள்ள இயற்கையான பொருட்களை உபயோகித்து, பக்க விளைவுகள் ஏதுமின்றி நம் கூந்தலை வளரச் செய்யும் மேஜிக் நம் கையில் உள்ளதென்றால் அது மிகையில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com