பெண்களுக்கு அதிகம் சிரமத்தை தருவது மாதாந்திர வலி தான். சூதக வலி அல்லது டிஸ்மெனோரியா எனப்படும் வலியால் அவதிப்படுபவர்கள் சித்த மருத்துவத்தில் சில எளிய வழிகளில் நிவாரணம் பெறலாம்.
மலை வேம்பு,வேர்ப்பட்டை பொடி1/4டீஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடித்தால் வலி குறையும்.
ஜாதிக்காய், திப்பிலி, சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடித்து 1/4டீஸ்பூன் மோரில் கலந்து குடிக்க ,வலி சட்டென குறையும்.
முருங்கைப்பூவை நெய் விட்டு வதக்கி உண்ணலாம்.
சதகுப்பை இலைச்சாறு 1டீஸ்பூன் எடுத்து ,தேன் கலந்து உண்ணலாம்.
ஒரு டீஸ்பூன் தண்ணீர் விட்டான் கிழங்கு சாறை , 1/4டீஸ்பூன் மிளகு பொடி கலந்து உண்ணலாம்.
ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்து பொடித்து அதை 1/4டீஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.
மாசிப்பத்திரி இலைச்சாறு 15மிலி அருந்த வலி குறையும்.
புதினா இலைகளை கைப்பிடி அளவு எடுத்து 2டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளர் ஆக வற்ற வைத்து பின் அருந்த வலி குறைந்து நல்ல நிவாரணம் தரும்.
கரியபோளம், பொரித்த பெருங்காயம் இரண்டையும் சம அளவு எடுத்து தேன் விட்டு அரைத்து, அதை மிளகு அளவுக்கு உண்ணலாம்.
1/4டீஸ்பூன் குங்குமப்பூவை எலுமிச்சை சாறு, நீர் சேர்த்து அருந்தலாம்.
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மோரில் கலந்து அருந்தலாம்.
முடக்கத்தான் இலையை விளக்கெண்ணையில் வதக்கி அடிவயிற்றில் பற்று போடலாம்.
சிற்றாமணக்கு இலையை சிற்றாமணக்கு எண்ணையில் வதக்கி அடிவயிற்றில் பற்று போட நல்ல குணம் கிடைக்கும்.
நொச்சி இலையை நீரில் போட்டு காய்ச்சி, இடுப்பு பகுதியில் ஒத்தடம் கொடுக்க, வலி குறைந்து நல்ல நிவாரணம் தரும்.
இந்த குறிப்புகளை சித்த மருத்துவம் படிக்கும் என் தோழியின் மகள் சொன்னதை தொகுத்து எழுதியுள்ளேன்.
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.