ஆஸ்துமாவிலிருந்து விடுபட எளிய வழிகள்!

ஆஸ்துமாவிலிருந்து விடுபட எளிய வழிகள்!
AskinTulayOver
Published on

ஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமையால், வைரஸ் தொற்றுக்கள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள். இந்நோய் பெரும்பாலும் பெண்களை விட, ஆண்களுக்கே அதிக பாதிப்பைத் தருகிறது. மன அழுத்தம், கவலை இதன் காரணமாக தலைவலி, தூக்கமின்மை வருகிறது. பின் நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல் தோன்றி, அது ஆஸ்துமாவாக பிரச்னைகளைக் கொடுக்கிறது. இதனை குணப்படுத்த எளிய சித்த, வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றலாம்.

* பத்து துளசி இலைளை அடிக்கடி மென்று சாப்பிட, நெஞ்சு சளி கரையும்.

* அருகம்புல் சாறு பருகி வர, நோயின் பாதிப்பு குறையும்.

* தூதுவளை ரசம் வைத்து அடிக்கடி குடித்து வர, சளி கரையும்.

* வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தண்ணீர் அருந்தலாம்.

* மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடிக்க உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

* முசுமுசுக்கை இலையை வதக்கி அடையாகவோ, தோசை மாவிலோ கலந்து சாப்பிடலாம்.

* கற்பூரவல்லி இலை 3, மிளகு 3, வெற்றிலை 2 சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகலாம்.

* ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, சளி கரைந்து வெளியேறும்.

* மஞ்சள் தூளை பாலில் கலந்து கொதிக்கவிட்டு பின் அருந்தலாம்.

* இருமலுக்கு சுக்குக் காபி அல்லது எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

* கடுகுத் தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் உடனே நிற்கும்.

* ஆடாதொடை இலையை வதக்கி சாப்பிட, ‌வறட்டு இருமல் குணமாகும்.

* மார்பில் வலி ஏற்பட்டால் அகத்திக்கீரை பொடியை பாலில் சேர்த்து காலை, மாலை அருந்த வயிறு, மார்பு வலி குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com