
ஏபிசி ஜூஸ் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மாதுளம் பழம், பீட்ரூட், ஊறவைத்த சியா விதை அடங்கிய PBC ஜூஸ் பற்றியும் அதனுடைய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காண்போம்.
மாதுளை, பீட்ரூட் ,சியா விதை மூன்றின் கலவையான PBC ஜூஸ் பலவித நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது. மாதுளை பழத்தில் இருக்கும் பியூனிக் கெலெகின்ஸ் (punicalacins) என்னும் மூலக்கூறு நம் இதயத்திற்கு மிக மிக நல்லது. பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் ரத்தக்குழாய்களை சுருங்க விடாமல் ஆக்ஸிஜனை எடுத்து செல்வதையும் சரியான அளவில் நிர்வகிப்பதற்கு உதவி செய்யக்கூடிய முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
அதோடு இதில் சேர்க்கப்படுகிற சியா விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் முக்கியமான ஆற்றல் மிக்க வைட்டமின்களும் இருப்பதால், இது இதயம் மற்றும் கண்களுக்கு மிக நல்லது.
பிபிசி ஜூஸ் (PBC ஜூஸ்) நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உடையவர்கள், இதய நோய் ஆபத்து உள்ளவர்கள் முதல் உடலை ஃபிட்டாக வைத்திருப்பவர்கள், முழு ஆரோக்கியமாக இருப்பவர்கள் மற்றும் குழந்தைகள் வரை எல்லோருமே எடுத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களும் உடல் பருமன் உள்ளவர்களும் கலோரி மற்றும் கிளைசெமி குறியீட்டளவில் இதனை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. பீட்ரூட் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படாத பட்சத்தில் வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் எடுத்துக் கொள்வது சிறந்தது.
பொதுவாக சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் பீட்ரூட்டில் அதிக அளவு நைட்ரேட்ஸ் இருப்பதால் தவிர்ப்பது நல்லது என்று சொல்வார்கள்.
மற்றவர்கள் தினமும் சராசரியாக 200 மில்லி முதல் 300 மில்லி அளவுக்குள் குடிப்பது நல்லது. நீரிழிவு நோயாளிகள், குழந்தைகள் 150-200 மில்லி எடுத்துக் கொள்ளலாம். பழங்கள் மற்றும் பழச் சாறுகளில் வைட்டமின்களும், மினரல்களும், நார்ச்சத்துக்கள் கிடைத்தாலும் , ஜூஸ் வகைகளில் புரதங்கள் கிடைப்பதில்லை.
ஆனால், இந்த PBC ஜூஸின் உட்பொருள்களில் மூன்றாவதாக செயல்படுகிற சியா விதை ஊறவைத்து இரண்டு ஸ்பூன் அளவு சேர்ப்பதால், அதில் போதிய அளவு நார்ச்சத்து, ஒமேகா 3 ஆகியவை இருப்பதோடு 4 கிராம் அளவிற்கு புரதமும் நமக்குக் கிடைக்கிறது.
மாதுளையில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட ஆற்றல் வாய்ந்த ஊட்டச்சத்துக்களோடு இரும்புச்சத்தும் இருப்பதால் இது ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து அனீமியா வராமல் தடுத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
பீட்ரூட் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தப் பிரச்சனையை போக்குவதோடு இதில் இரும்புச்சத்து உள்ளிட்ட மினரல்களும் இருக்கின்றன.
சியா விதையில் புரதம் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றோடு ஆற்றல்மிக்க ஆன்டி ஆக்சிடென்ட்களும் நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு ஆற்றலை தருகிறது.
ஆக, ABC ஜூஸை விட இந்த PBC ஜூஸ் எல்லாவற்றிலும் எல்லாருக்கும் நன்மையை அளிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)