இது மட்டும் உங்களுக்குத் தெரிஞ்சா தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை டன் கணக்கில் சாப்பிடுவீங்க! 

Honey + Small onion
Honey + Small onion
Published on

இயற்கை மூலிகைகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக நோய்களைத் தடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தி வந்துள்ளனர். அந்த வகையில் தேன் மற்றும் சின்ன வெங்காயம் போன்ற பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. இந்த இரண்டு பொருட்களையும் இணைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பற்றி நாம் இன்றும் கேள்விப்படுகிறோம். இது உடலுக்கு பலவகையான நன்மைகளை தருகிறது. இந்தப் பதிவில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

தேன் மற்றும் சின்ன வெங்காயம் இரண்டும் தனித்தனியாக பல சத்துக்கள் நிறைந்தவை. தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும், காயங்களை ஆற்றுவதற்கு உதவும் மற்றும் உடல் ஆற்றலை அதிகரிக்கும்.‌ சின்ன வெங்காயம் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தது. இது ரத்தத்தை சுத்திகரித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதன் நன்மைகள்: 

  • தேன் மற்றும் சின்ன வெங்காயம் இரண்டிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் உள்ளன. இந்தக் கலவையை தொடர்ந்து சாப்பிடுவதால் நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். 

  • சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. தேன், செரிமானத்தை எளிதாக்கி வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. 

  • சின்ன வெங்காயம் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தேன் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.‌

  • தேன் மற்றும் சின்ன வெங்காயம் இரண்டுமே உடல் எடையை குறைக்க உதவும் என்பதால், அவற்றை சேர்த்து சாப்பிடுவது உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும். 

  • இவற்றில் இருக்கும் சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும், சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர் மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது. 

இதையும் படியுங்கள்:
உங்கள் குணாதிசயங்களை மற்றவர்க்குக் காட்டும் சின்னச் சின்ன நடவடிக்கைகள்!
Honey + Small onion

தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை தயாரிப்பது மிகவும் எளிது. சின்ன வெங்காயங்களை தோல் உரித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மீது தேன் ஊற்றி மூடி வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் அப்படியே ஊறிய பிறகு இதை சாப்பிட சுவையாக இருக்கும். 

தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு இயற்கை மருத்துவக் குறிப்பு. இது பல வகையான மருத்துவ நன்மைகளைத் தருகிறது. இருப்பினும் இவற்றை அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல. தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com