அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் 6 பொருட்களில் இவ்வளவு நன்மைகளா..!

Anjaraipetti
AnjaraipettiImg Credit: Ayurvedham

இப்போது வாழ்க்கை முறை மாறி விட்டது. நேரத்திற்கு சாப்பிடாதது, பசிக்கும் நேரத்தில் பீட்ஸா, பர்கர், பிரியாணி என சாப்பிடுவது இதெல்லாம் உடலை‌‌ ஆரோக்கியமாக இருக்க உதவுவதில்லை‌‌. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள்களை வைத்தே நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

  • சீரகம்:

அகத்தை சீர் படுத்துவதால் இதற்கு சீரகம் என்ற பெயர் வந்தது. சீரகத்தில் வைட்டமின் பி, சி, இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன. சீரகம் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை தினமும் குடித்து வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது. குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

  • வெந்தயம்:

முளைகட்டிய வெந்தயம் தினமும் ஒரு கப் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் வராமல் தடுக்கும். வெந்தயத்தை ஊற வைத்து அதை ஊற வைத்த நீருடன் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்க உதவுகிறது. மலச்சிக்கல் தீரும். இதுவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த உதவும்.

  • மிளகு:

ஜலதோஷம், சளி, இருமல் அனைத்துக்கும் அரு மருந்து மிளகு தான். இருமல் அதிகமாக இருந்தால் மிளகு பொடியுடன் சிறிது தேனை குழைத்து ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் இருமல் குணமாகும். மிளகு தண்ணீர் உடலுக்கு அவ்வளவு நல்லது‌‌. நீரிழப்பைத் தடுக்கும். நச்சுக்களை வெளியேற்றும். சரும அமைப்பை மேம்படுத்த உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது மிளகு.

  • ஓமம்:

ஜீரணத்திற்கு மட்டுமன்றி சளி இருமல் தொந்தரவுக்கும் ஓமம் அருமருந்து. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்க உதவுகிறது. ஓமத் தண்ணீர் பருகினால் மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி குணமாகும். நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஓமம் போட்டு ரசம் வைத்து சாப்பிட்டால் அஜீரண கோளாறுகள் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
Heat Stroke: வெயிலில் அதிகமா போகாதீங்க, ஹீட் ஸ்ட்ரோக் வரலாம்... ஜாக்கிரதை! 
Anjaraipetti
  • மஞ்சள் தூள்:

அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் பொடியில் எத்தனை நன்மைகள் தெரியுமா? வைட்டமின் சி என்கிற ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ள பொருளாகும். வைட்டமின் பி அதிகம் உள்ளதால் மஞ்சள் இன்று உலகளவில் வைரஸூக்கு எதிராக செயல்படும் பொருளாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.

  • பெருங்காயம்:

இதில் உள்ள மருத்துவ குணங்களால் இதை 'கடவுளின் அமிர்தம்' என்பார்கள். சிறந்த மலமிளக்கியும் கூட. நரம்புகளை பலப்படுத்தும். மூட்டுகளில், வயிற்றில் ஏற்படும் வாய்வு வலியை குணப்படுத்த பெருங்காயம் கலந்த சுடு நீர் உதவும்.

அஞ்சறைப் பெட்டி பொருள்களை உபயோகப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com