அடேங்கப்பா! இலுப்பைப் பூவில் இவ்வளவு நன்மைகளா?

Cherry Blossom
Cherry Blossom

இயற்கையானது வெறும் அழகை மட்டுமின்றி நம்ப முடியாத ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் வளமான தாவரங்களையும் நமக்காக வழங்கியுள்ளது. Mahua Flower என அழைக்கப்படும் இலுப்பை பூ இயற்கையின் ஒரு வரப்பிரசாதமாகும். பொதுவாகவே வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படும் இந்த மலர், சுற்றுப்புறத்திற்கு அழகை சேர்ப்பது மட்டுமின்றி பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இந்த பதிவில் இலுப்பைப் பூவை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

இலுப்பைப் பூவில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இது நமது உடலை தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது. இவற்றில் நிறைந்துள்ள சில சேர்மங்கள் செல்லுலார் சேதத்தைக் குறைப்பதால், இவற்றை உணவாக உட்கொள்வது உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். 

மஹுவா பூவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. மேலும் இதில் உங்கள் உடலின் பாதுகாப்பை பலப்படுத்தும் வைட்டமின் சி, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய விட்டமின்களும் தாதுக்களும் உள்ளன. இது உங்களது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கி, பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. 

மேலும் இலுப்பை பூவானது பல காலமாகவே செரிமானத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கலைப் போக்கி குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்கிறது. மேலும் இந்த பூவில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உங்களது செரிமான கோளாறுகளைத் தடுப்பதால் இலுப்பைப் பூவை உணவில் சேர்த்துக் கொள்வது, உங்களது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

ஆஸ்துமா, இருமல் அல்லது நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இலுப்பை பூ நிவாரணம் அளிக்கிறது. இது சளியை தளர்த்துவதால் சுவாசப்பாதையில் படிந்திருக்கும் சளியை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இந்த பூவின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரல் காற்றுப்பாதையில் உள்ள வீக்கத்தைக் குறைத்து, எளிதாக மூச்சு விட உதவும்.

இதையும் படியுங்கள்:
'கப்ளி வீட்'டில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Cherry Blossom

இலுப்பை பூ இயற்கையான ஆற்றல் நிறைந்த ஒரு உணவாகும். இதில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது உங்களுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது. எனவே இலுப்பை பூவை உங்களது உணவில் சேர்த்துக் கொள்வது, நாள் முழுவதும் உங்களை சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். 

இப்படி இலுப்பை பூவின் ஆரோக்கிய நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். இப்போதெல்லாம் இலுப்பை மரங்களை அதிகமாகக் காண முடிவதில்லை. ஒருவேளை உங்கள் வீட்டின் அருகே இம்மரம் இருந்தால், அதை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com