பயறுகளை முளைகட்டி சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?

பயறுகளை முளைகட்டி சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?
Published on

ட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதன் காரணமாக முளைகட்டிய பயிறு வகைகள், ‘சூப்பர் ஃபுட்ஸ்’ என்று குறிப்பிடப்படுகின்றன. முளைகட்டிய பயிறு வகைகளை பலர் பச்சையாக உட்கொள்கிறார்கள்; சிலர் லேசாக வேகவைத்து அல்லது சமைத்தும் உட்கொள்கிறார்கள். குறைவான கலோரி, அதிக பைபர் சத்து, வலுவான புரோட்டின் சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் காப்பர் மற்றும் மாங்கனீசு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஸ்நாக்ஸாக முளைகட்டிய பயிர்கள் குறிப்பிடப்படுகின்றன.

முளைகட்டிய பயிர்களில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இவற்றை அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் சில நன்மைகளும் கூடவே சில அபாயங்களும் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

நன்மைகள்:

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்: நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் ரத்தச் சர்க்கரையை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவும். இது தொடர்பான ஆய்வில், ‘ரா ஸ்ப்ரவுட்ஸ்’ என்பவை என்சைம் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் திறனை கொண்டிருக்கலாம். எனவே, இது சர்க்கரையை சரியாக உடைத்து ஜீரணிக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.

செரிமான மேம்பாடு: முளைகட்டிய பயிர்களை பச்சையாக உட்கொள்ளும்போது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் மற்றும் செரிமான பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.

இதய ஆரோக்கியம் மேம்படுகின்றன: தினசரி உணவில் சமைக்காத முளைக்கட்டிய பயிறு வகைகளை சேர்த்துக்கொள்வது நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் ஹெச்டிஎல் ஐ அதிகரிப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது என்பதை பல ஆய்வுகள் எடுத்துக்காட்டி உள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால், இது மொத்த கொழுப்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தீமைகள்:

ஃபுட் பாய்சனிங்: முளைகட்டிய பயிறு வகைகளை பச்சையாக உட்கொள்ளும்போது அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். மேலும், இவை பரப்பு நோயை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பயறுகளை முளைகட்டிய பின் அவற்றை அப்படியே சாப்பிடாமல் நன்கு வேகவைத்து சாப்பிடுவது நோய்களிலிருந்து தப்பிக்க உதவும்.

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு அபாயங்கள்: ஸ்ப்ரவுட்ஸ் தவறான முறையில் வளர்க்கப்ப்பட்டால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com