பப்பாளி இலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

பப்பாளி இலைச்சாறு
Papaya leaf juicehttps://www.hkvitals.com

ப்பாளி இலைகளில் ஏகப்பட்ட வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் B, E, A, K, தாதுக்கள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் உட்பட சபோனின்கள், டானின்கள், ஆல்கலாய்டுகள் அடங்கியிருக்கின்றன.

இதில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்று பிரச்னை, வாய்வு தொல்லை, வயிறு மந்தம், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு பப்பாளி இலைச்சாறு கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி ஆகியவற்றிற்கும் பப்பாளி இலைகள் அருமருந்தாக விளங்குகின்றன.

பப்பாளி இலைகளில் லைகோபீன் உள்ளதால், புற்றுநோயை தடுக்கும் பண்புகளை இது பெற்றிருக்கிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மட்டுமல்லாமல், அதனால் உண்டாகும் சிக்கல்களையும் இது தடுத்து காக்கிறது. சருமப் பிரச்னை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பல பிரச்னைகளுக்கும் பப்பாளி இலை நல்ல தீர்வாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 
பப்பாளி இலைச்சாறு

தினமும் நாம் பப்பாளி இலைச் சாற்றினை சிறிய அளவில் குடித்து வந்தால், அது நமது உடம்பின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்னைகளை தடுக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேறி, இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை பப்பாளி இலைகளுக்கு உண்டு.

பப்பாளி இலைச் சாற்றை உச்சந்தலையில் தடவி வந்தால் முடி வளர்ச்சி மற்றும் முடி ஆரோக்கியம் அதிகரிக்கும், பொடுகு நீங்கும். பப்பாளி இலைகளில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்தை எளிதாக்க பெரிதும் உதவுகிறது.

பப்பாளி இலையை நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து தைலம் போல் காய்ச்சி வடிகட்டி, இந்த எண்ணெய்யை கட்டி மேல் தடவினால் கட்டிகள் உடையும். வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். காயம் பட்ட இடத்தில் பூசினால் காயங்கள் விரைந்து குணம் பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com