சீவி எறியும் தோலில் இத்தனை சத்தா? இவ்வளவு நாளா தெரியாம போச்சே!

So many nutrients in vegetable peels?
So many nutrients in vegetable peels?Abinaya Narayanan

ம் உடல் நலம் காப்பதற்கு இயற்கை அளித்த கொடைதான் நம்மைச் சுற்றி விளையும் காய்கறிகள். ஒவ்வொரு காய்கறிகளிலும் என்னென்ன நன்மைகள் உள்ளன, எந்த நோய்க்கு எந்த காயைச் சாப்பிட வேண்டும் என தேடித்தேடி படித்து அதன்படியே அவற்றை நமது அன்றாட உணவில் சேர்த்து சமைத்து உண்கிறோம். ஆனால், அந்தந்த காய்கறிகளின் முழுமையான பலன்கள் நமக்குக் கிடைக்க, சரியான வழிமுறைகளைப் பின்பற்றி அவற்றைச் சமைத்து உண்கிறோமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

குறிப்பாக, காய்கறிகள் மற்றும் பழங்களின் தோல்களை சீவி விட்டுப் பயன்படுத்துவதே நம்முடைய வழக்கமாக உள்ளது. ஏனெனில், தோல் உரிக்கப்பட்ட காய்கறிகளை சாப்பிடுவதுதான் சுவையானது என்ற கருத்து பலருக்குள் ஆழமாக பதிந்துள்ளது.

பல்வேறு காய்கறிகளின் தோலை அவற்றின் ஆரோக்கிய நன்மைகளை உணராமல் தூக்கி எறிவதால் மிகச்சிறந்த ஊட்டச் சத்துக்களை இழக்கிறோம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஒவ்வொரு காயும் கொண்டுள்ள மொத்த சத்துக்களில் பெரும்பான்மையான சத்துக்கள் பொதுவாக தோல் பகுதியில் மிகுந்திருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

உருளைக்கிழங்கு: தோலை உரிக்காமல் சமைக்க வேண்டிய கிழங்குகளில் ஒன்று உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கின் தோலில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. உருளைக்கிழங்கு தோல் உங்கள் சருமத்திற்கும் நல்லது. கூடுதலாக, இது புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தவும், எடை மேலாண்மைக்கும் பெருமளவு உதவுகின்றன. உருளைக்கிழங்கு, வாழைக்காயின் தோல்களை நீக்காமல் சமைப்பதால் அவற்றில் உள்ள வாய்வு பிரச்னைக்கு அவற்றின் தோல்களே மருந்தாகின்றன.

கேரட்: கேரட் தோல்களில் அதிக ஊட்டச்சத்துக்கள், குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கூறுகள் மற்றும் அவற்றின் தோல்கள் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கண் ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் நன்கு அறியப்பட்டவை.

கத்தரிக்காய்: இதன் தோல் கடுமையானதாகக் காணப்பட்டாலும், கத்தரிக்காய் தோலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இவை அறிவாற்றல் செயல்பாட்டிற்கான சாத்தியமான நன்மைகள் கொண்ட நன்கு அறியப்பட்ட ஆக்ஸிஜனேற்றியாகும். நார்ச்சத்து மிகுந்த கத்தரிக்காய் தோல்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மனநிலையை மாற்றுவது எப்படி?
So many nutrients in vegetable peels?

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை தோலுரித்தால், தோலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நீக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. அதன் தோலில் நன்மை பயக்கும் பல நொதிகள் காணப்படுகின்றன. வெள்ளரி தோல்களில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை சாண்ட்விச்சுகள் மற்றும் சாலட்களுக்கு மிகவும் சிறந்தது. இந்த தோல்களில் கொலாஜனை உற்பத்தி செய்து சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் சிலிக்காவும் உள்ளது.

பீட்ரூட்: பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் C போன்ற ஊட்டசத்துக்கள் அதிகம் நிறைந்ததுதான் பீட்ரூட் ஆகும். தோலுரித்த பீட்ரூட் சாப்பிடுவதால் பல ஊட்டச்சத்துக்களை நாம் இழந்து விடுகிறோம் என்பதை உணருங்கள்.

அதேபோல பூசணி, சுரை, பீர்க்கு, நூக்கல், முள்ளங்கி அனைத்தையும் இயன்றவரை தோல் நீக்காமல் சாப்பிடுவதே உடலுக்கு நன்மை பயக்கும்.

இங்கு நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது, சமையல் செய்வதற்கு முன்பு இந்த காய்கறிகளை பலமுறை தண்ணீரில் அலசி கழுவ வேண்டும் என்பதுதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com